Monday, November 23, 2009
சாய்பாபாவின் மறுபக்கம் மக்கள் தொண்டு
: * அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பார்.
ஆழ்ந்த அன்பு கொண்டு மக்களுக்கு அன்பு செய்யுங்கள். உங்களிடம்
ஊற்றெடுக்கும் அன்பினை தொண்டாக மாற்றுங்கள்.
* நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெளியுலக வாழ்வில் எத்தனை
யோ சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. அப்போது அச்சூழ்நிலை நம்மைத்
தாக்காதபடி, நம்பிக்கையே கவசம் போல் பாதுகாக்கும்.
* நல்லனவற்றை தேடிச் சென்று கேளுங்கள். நல்லதை மட்டுமே காணுங்கள்.
நல்ல செயல்களைச் செய்யுங்கள். அப்போது நீங்கள் இறையருளைப் பூரணமாகப்
பெறுவதற்கு தகுதி உடையவராவீர்கள்.
*மிருகவுணர்ச்சி மேலோங்கினால், நாம் அழிவுப் பாதைக்குச் சென்று விடுவோம்.
தீமையை நன்மையால் வெல்வதைப் போல, மிருக உணர்ச்சியைக் களைந்து
தெய்வீக உணர்வினை உள்ளத்தில் பரவவிடுங்கள்.
* மேலான செல்வம் இறையருள் மட்டுமே. கடவுளிடம் எள்ளளவும் சந்தேகம்
கொள்ளாமல் முழுமையாகச் சரணாகதி அடைந்து விட்டால், கண்ணை இமை
காப்பதுபோல நம்மைக் காத்து கரை சேர்ப்பான்.
* தயிரை மத்தினால் கடையக், கடைய மோர் தனியாகவும், வெண்ணெய் தனி
யாகவும் பிரியத் துவங்கும். அதுபோல, ஆன்மிக சக்தியால் உள்ளத்தைக்
கடைந்தால் அசத்தியம் விலகி சத்தியமாகிய கடவுள் வெளிப்படுவார்.
* முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி
அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப்
பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்.
* கடவுள் நம்பிக்கை வேண்டாத பரபரப்பு, பயம், அறியாமை, கவலை ஆகிய
வற்றைத் தோற்றுவிக்கும் வேர்களைக் களைந்துவிடும். கடவுளை நம்புபவர்
முகத்தில் கவலை ரேகைகள் படர்வதில்லை. நடப்பன யாவும் நல்லதற்கே,
நடப்பதெல்லாம் அவன் விருப்பப்படி தான் என்ற சிந்தனை மேலோங்கும்.
* அடுத்தவர் மீது குற்றம் காணவும், குறை சொல்லவும் நமக்கு உரிமை இல்லை.
அவர்களிடம் கோபப்படவும் உரிமை கிடையாது. நம்மை நாமே தூய்மையாக்கிக்
கொண்டு நல்லவனாக வாழ முயற்சிக்க வேண்டும்.
* நம் வாழ்நாள் பனிக்கட்டி போல உருகிக் கொண்டே போகிறது. பிறவி எடுத்ததன்
நோக்கத்தை உணரத் தலைப் படுங்கள். கடவுளோடு நம்மை இணைத்துக் கொள்
ளும் மேலான நிலைக்கு முன்னேறுங்கள்.
* எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ் வொருவர் வாழ்விலும் நான்கு
நாட்களே சிறப்பான நாட்கள். பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி கடவுளின் பெருமை
யைப் பாடும் நாள், பசித்தவர்களுக்கு பசியாற உணவிடும் நாள், சாதுக்கள், நல்ல
வர்களைச் சந்திக்கும் நாள், தனிமனிதனுக்கு ஞானம் பிறக்கும் நாள்.
*வெற்றி பெறும்போது, பலரும் கடவுளை மறந்து விட்டு தன் முயற்சியால்
வெற்றி வந்ததாக எண்ணி ஆணவம் கொள்கின்றனர். தோல்வியின் போதோ
நம்பிக்கை இழந்து கடவுளை நிந்திக்கிறார்கள். ஆனால், உண்மையான பக்தி
உள்ளவன் தன் மனச்சமநிலையை எப்போதும் இழப்பதில்லை.
* மனிதன் இயற்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்
கின்றன. பசு பால் தந்து உலகைக் காக்கிறது. ஆறு நீரைத் தந்து உயிர்களைக்
காக்கிறது. அறிவில் குறைந்த பறவை, விலங்கினங் களிடமிருந்து பொது நல
மனப் பான்மையை மனிதர்கள் பெற்று வாழ வேண்டும்.
தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தவர் : பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு
தேவை என்பதை அறிந்த சாய்பாபா பல திட்டங் களை செயல் படுத்தியுள்ளார்.
1994ல் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட் டத்திலுள்ள 750 கிராமங் களில்
வசிக்கும் 9லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம் செயல்
படுத்த பட்டது. இதற்கு 284 கோடி ரூபாய் செல விடப்பட்டது. இதற் காக
ஆந்திர அரசின் நிதி பங்களிப்பு எதுவும் கிடையாது. சத்யசாய் டிரஸ்ட் மூலமே
இந்தப் பணம் கொடுக்கப் பட்டது. இந்த திட்டத்தை பிரபல நிறுவனமான லார்சன்
அன்ட் டூப்ரோ அமைத்துக் கொடுத்தது. இந்த திட்டத்தின் விசேஷ அம்சம் என்ன
வென்றால், 9 லட்சம் மக்கள் பயன்பெறும் இந்த திட்டம் எதிர் காலத்தில் மக்கள்
தொகை அதிகரித்தாலும் கூட, அதாவது 12.50 லட்சம் மக்களுக்கு பயன்படும்
வகையில் செயல் படுத்தப் பட்டது குறிப்பிடத் தக்கது. 750 கி.மீ., தூரத்துக்கு
மெயின் குழாய்களும், 1550 கி.மீ., தூரத்துக்கு கிளை குழாய்களும் அமைக்கப்
பட்ட இந்த பிரம்மாண்ட திட்டத்தில் 40 ஆயிரம் முதல் 3 லட்சம் லிட்டர் கொள்
ளளவு உடைய 268 மேல்நிலைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டன.ஆன்மிகம்
என்பது பொதுச்சேவையே என்பதை பாபா இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒன்லி சர்விங்... நோ பில்லிங் : ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியிலும்,
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியிலும் இலவசமாக அனைத்து மருத்துவ உதவி
களையும் வழங்கி வரும் சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி இயங்கி
வருகிறது. இங்கு வரும் நோயாளி களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் மனித நேய
உணர்வுடன் சேவை செய்யப்படுகிறது. அனைவருக்கும் முற்றி லுமாக இலவச
மருத்துவ சேவை செய்வது இன்னும் விசேஷம். சாய்பாபாவின் அன்னை
ஈஸ்வரம்மா புட்டபர்த்தியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு
மருத்துவ மனை அமைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை மகனிடம்
தெரிவித்தார். பாபாவும் அம்மாவிடம் சரியான சந்தர்ப்பத்தில் அந்த விருப்பத்தை
நிறைவேற்ற உறுதியளித்திருந்தார். அதன்படி, பிரசாந்தி நிலையத்தில்
1954, நவம்பர் 23ல் இம் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு1956ம்
ஆண்டு அக்டோபர் 4ல் திறந்து வைக்கப் பட்டது. தொடக்க காலத்தில்
12 படுக்கைகள் கொண்ட சிறு மருத்துவமனையாக இருந்தது. 1982
நவம்பர்23ல், நவீனவசதிகளைக் கொண்ட புதிய மருத்துவமனைக்கு
அடிக்கல் நாட்டப்பட்டு,1984 பிப்ரவரி29ல் தொடங்கப் பட்டது. இதில்
அறுவை சிகிச்சை, ரத்தவங்கி, நவீன லேப்வசதி, தீவிர சிகிச்சை பிரிவு,
எக்ஸ்ரே பிரிவு, கண், பல் மருத்துவம் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்
பட்டன. இதன் பிறகு புட்டபர்த்தியின் நுழைவுப் பகுதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி
ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டுவிழா 1990 நவம்பர் 22ல் நடந்தது. மிகவும் அதிசயத்
தக்க வகையில், 1991 நவம்பர் 22 ல் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவால்
மக்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. தொடங்கிய 15வது நிமிடத்தில் முதல் அறுவை
சிகிச்சையும் நடந்தது. மூன்று மணி நேரத்திற்குள்ளாக 4 அதிநவீன அறுவை சிகிச்
சைகள் நடந்து முடிந்தது ஆச்சரியப் படத்தக்கதாக இருந்தது. நாட்டின் பல இடங்
களில் இருந்தும் வரும் நோயாளிகளுக்கு முன்னணி மருத்துவர்கள் இங்கு
மருத்துவப்பணி செய்கின்றனர். இதய, சிறுநீரக, நரம்பு, கண் சம்பந்தமான
பிரச்னைகளுக்கும் அந்தந்த பிரிவு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது முதல் 2009 மார்ச் வரை 16 லட்சத்து
96ஆயிரத்து 719 நோயாளிகள் பலன் பெற்றுள்ளனர். இதய நோய்க்காக
8 லட்சத்து18 ஆயிரத்து 831 நோயாளிகள் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு பார்வையாளராக இங்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்
கலாம், ""கடவுளின் அருளாட்சி இங்கு நடக்கிறது. இங்கிருக்கும் மருத்துவர்களும்,
பணியாளர்களும் தேவதை களைப் போல இருப்பதை உணர்ந்தேன்'' என்றார்.
இங்கு வரும் நோயாளிகள் "ஒன்லி சர்விங், "நோ பில்லிங்' என்று சொல்லிச்
செல்வதைக் காண முடியும்.
Saturday, November 21, 2009
உயிர் கொடை
உயிர் கொடை என்பது என்ன ? பல கருத்துக்கள் இருக்கின்றன தியாகம், வேள்வி,
மூளைச்சலவை, கொலை,ஈகை இப்படிக்கூறிக்கொண்டே போகலாம். ஈழமக்களின்
உரிமைப் போராட்டக் களத்திலே இந்த உயிற்கொடை எப்படி நோக்கப்படவேண்டும்.
வேள்வி அல்லது தியாகம் என்பதுதான் பொருத்தமாக அமைகிறது. எந்த ஒரு உயிரும்
தெரிந்துகொண்டு உயிரைக் கொடுக்கச் சம்மதிப்பதில்லை. தற்கொலை என்பது கூட
உடனடியாக மனதில் ஏற்படும் சடுதியான முடிவே யல்லாமல் திட்டம் போட்டு யாரும்
தற்கொலை செய்வதில்லை. முயல்பவரின் செயலில் திடிரென ஏற்படும் எதிர்பாராத
தடங்கல் தற்கொலை முயற்சியைக் கைவிடவைக்கிறது. அதனால் அவர் இரண்டாவது
தடவை முயற்சி செய்வதில்லை. கடுமையான மனச்சிதைவுக்கு ஆட்பட்டவர்கள் மட்டுமெ
மீண்டும் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள். மூளைச்சலவை என்பது கூட
நூறு வீதம் சரிவருவதில்லை. பல மனவியாலாளர்களின் கருத்துப்படி எவ்வளவுதான் மூளைச்
சலவை செய்து தற்கொலைத் தாக்குதலுக்குத் தயார் படுத்தினாலும் அந்நபரின் அடி மன
தில் உள்ள உயிரின் மேலுள்ள ஆசை கடைசிநேரத்தில் அது நடக்காமல் தவிர்த்து
விடுகிறது. ஆகையால் தன் உயிரைத் தற்கொடையாக் கொடுப்பதற்கு நல்லமனத்திடம்
இருக்கவேண்டும். தான் கொடுக்கும் கொடை அவர்கள் மனதில் ஓர் அமைதியைக்
கொடுக்கவேண்டும்.மனமகிழ்சியையும் கொடுத்திருக்கவேண்டும். மூளைச்சலவை மூலம்
அவர் தற்கொலைக்கு வந்திருந்தால் கடைசி நேரத்தில் பின்வாங்கியிருப்பார் முயற்சி
தோற்றிருக்கும். கொள்கை ரீதியாக மனதைத் திடப்படுத்தியவர்களால் மட்டுமே தமது
பாரிய பொறுப்பை எவ்வித மனத்தடுமாற்றம் இன்றி தற்கொடையைக் கொடுத்திருக்க
முடியும். ஈழப்போரில் எதிரியானவன் எல்லா வளங்களுடனும் மிகப்பெரிய மனித வலு
வுடனும் களத்தில் நிற்கும்போது வளங்கள் அற்ற சிறு எண்ணிக்கைய்யான மனித
வளத்துடன் உள்ளவர்களால் இந்த உயிர்கொடை மூலமே பாரிய அழிவை கொடுக்க
முடியும் கொடுக்கமுடிந்த து ஒரு தற்கொடையாளி பலவருடம் பல பயிற்சிகளைப்
பெற்றுத் தன்னை தயார் படுத்துகிறான் என்றால் அவன் தான் செய்ய உள்ள கடமையில்
எவ்வளவு காதல் கொண்டவனாக இருக்க வேண்டும். ஒவ்வொரு போராளியும் தன்
கொடையால் வருங்கால சமுதாயம் சுதந்திரம் பெற்றுச்சுபிட்சமான வாழவைப்
பெறும் என மனப்பூர்வமாக நம்பினதால்தான் அந்த செயலில் எவ்வித தயக்கமும்
இன்றிச்செயல் படுகிறான் செயல் பட்டிருக்கிறான்.
மூளைச்சலவை செய்து பிக்பாக்கற் அடிக்கவைக்கலாம், களவெடுக்கவைக்கலாம்,
மற்றவர்களை ஏச வைக்கலாம், வம்புச்சண்டைக்குப் போகவைக்கலாம், மற்ற ஒரு
உயிரை கொல்ல வைக்கலாம் ஆனால் தன் உயிரைக் கொல்லவைக்க முடியாது.
ஆகையால் மூளைச்சலவை மூலம் தற்கொடைப்போராளி உருவாகிறான் என்பது
வீண் வாதமே அன்றி வேறு ஒன்றும் இல்லை.
தியாகமும் மனத்திடமும் கொள்கைப்பற்றும் இருந்தால் மட்டுமே ஒருவரால் இந்த
வேள்வியில் ஈடுபடமுடியும், தன்னை ஆகுதி யாக்க முடியும்.
யப்பானியர்களால் இரண்டாம் உலக யுத்த த்தின் போது எதிரி கப்பல்களை அழிக்க
உருவாக்கியதே இந்த தற்கொலைத்தாக்குதல். சில இஸ்லாமியக்குழுக்களால் இந்த
தற்கொலைத் தாக்குதல் பின்பற்றப் பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஜிகாத் என்பதும் ஈழத்தமிழரின் தற்கொடைத் தாக்குதல் என்பதும்
ஒன்றாக நோக்கப் படக்கூடாதது. அது வேறு இது வேறு
இதைத் தற்கொடை யாகவும் வேள்வி யாகவும் மிகப்பெரும் உயிர் ஆயுத மாகக்கட்டி
எழுப்பியவர்கள் ஈழத்தமிழ்ப்புலிகள் மட்டுமே.
Sunday, November 08, 2009
வயது +பணம் + சக்தி என்றும் சேர்ந்து வருவதில்லை
சேர்ந்து வருவதில்லை.
இளம் வயதில் ( Teen Age)
நேரமும் உடலில் சக்தியும் இருக்கும் ஆனால் பணம் இல்லை.
வேலைசெய்யும் வயதில்
பணம் இருக்கும் உடலில் சக்தி இருக்கும் ஆனால் நேரம் இருப்ப
தில்லை.
ஓய்வு பெற்ற வயதான காலத்தில்
பணமும் இருக்கும் நேரமும் இருக்கும் ஆனால் உடலில் சக்தி
இருப்பதில்லை.
Wednesday, November 04, 2009
ஈழத்தில் சினிமாச்சீரழிவு தேவையா?
கனவுத்தொழிர்சாலையே முக்கிய காரணம். இதை பல இந்தி
ய அறிஞர்களே சொல்லியுள்ளார்கள். ஈழத்து இளைஞர்களி
டம் சினிமா மோகம் அல்லது சினிமா வெறிஇருக்காததினால்
அவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்
துள்ளார்கள். இந்திய இளைஞர்களிலும் பார்க்க கலாச்சார விழு
மியங்களில் ஈழத்து இளைஞர்கள் சிறந்து விளங்குவதற்கும்
ஈழத்தில் சினிமா இல்லாமல் இருப்பது முக்கியகாரணமாகிறது.
சினிமாத் தொழிற்ச்சாலை பரத்தைத்தனத்தை ஊக்குவிப்பதில்
முன்னணி வகிப்பதாக பல இந்திய கலாச்சார ஆவலர்கள் தெரி
வித்துள்ளார்கள்.சமிபத்தில் வெளிவந்த புவனேஸ்வரி விவகாரங்
கள் அதன் தொடர்ச்சியாக வந்த நடிகர் சங்க ஆர்ப்பாட்டங்கள் எவ்
வளவுதூரம் சினிமா சீரழிந்து போய்யுள்ளதற்குரிய ஆதாரங்களா
கும். இந்நிலை ஈழநாட்டிலும் வரவேண்டுமா என்பதை ஈழத்தமிழர்
சீர்தூக்கிப்பார்க்கவேண்டும்.சினிமாவினால் ஏற்படும் கலாச்சாரச்
சீரழிவைக் கண்டுகொண்ட தமிழ் ஈழத்தலைவர் பிரபாகரன் தன்
ஆளுகைக்குட்பட்ட்பிரதேசங்களில் தமிழ்நாட்டு ஆபாசச்சினிமாவை
முற்றாகத்தடைசெய்திருந்தார்.அத்துடன் ஈழமக்கள் நூறு சத வீதம்
கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்ததால் சினிமாவின் சீர்கேடுக
ளை அறிந்து அதை ஒரு பொழுதுபோக்கும் சாதனமாகவே நிலை
நிறுத்திக்கொண்டார்கள்.
றேடியோ பாகங்களை உற்பத்திசெய்யும்
தொழிற்சாலைநடத்திச்செல்வந்தரான வி.பி.கணேசன் ஈழத்துச்சினி
மாதயாரிப்பில் இறங்கி நொடிந்து போன நிலையை அவரின் மகனி
டங்கேட்டால் உண்மை தெரியும்.
பொருளாதார ரீதியில் சினிமாதயாரிப்பு வெற்றி பெறுமா என்பது கேழ்விக்
குரியதே.ஈழத்தில் வெளி வரும் சஞ்சீகைகளுக்கே வரவேற்பு
இல்லாத நிலையில் ஈழத்துச்சினிமாவெகுஜன ஆதரவைப்பெறுமா
என்பது ஆராயப்படவேண்டியவிடயமாகிறது.இன்று இந்தியச்சினிமா
புலம்பெயர்ந்த தமிழரின் ஆதரவில் தங்கியிருந்தாலும் எங்கள்
ஈழத்து மக்கள் ஈழத்தமிழ் சினிமாவை ஆதரிப்பார்களா என்று வினா
வினால்இல்லை என்றே விடைகிடைக்கும். இந்தியப்படங்களுக்குத்தடை
விதித்திருந்த கால கட்டத்தில் ஈழத்தில் தாயாரித்தபடங்கள் ஓட்டப்பட்ட
னவே அல்லாமல் அதுவாக ஓடவில்லை என்பதுதான் யதார்த்தம்.
Saturday, October 31, 2009
விசித்திரமான மிருககாட்சிசாலை
கொண்டதாகவும் காட்சியளித்தது. சில கூடரங்களில் இரு
மிருகங்கள் காட்சிதந்தன. வேறு சிலகூடாரங்களில் ஒரே
ஒரு மிருகம் கண்களில் கண்ணீருடன் வலம் வந்துகொண்
டிருந்தது. இப்படிப் பல கூடாரங்களில் பல அடைக்கப்பட்டி
ருந்தன. இந்தக் கூடாரங்களில் உள்ள மிருகங்கள் எல்லாம்
வெள்ளை முடிகளுடன் காட்ச்சியளித்தன. அத்துடன் நாடி
விழுந்து தோல் சுருக்கங்களுடன் காணப்பட்டன. பெரும்
பாலும் எல்லாமிருகங்களின் கண்கள் பனித்தே காணப்பட்
டன.சிலதுகளின் பார்வை எங்கோ தொலைவில் உள்ள
ஒன்றை நோக்கியும் கூடுதலான் எதிர்பார்ப்புகளுடனும்
அதுவும் தங்களுக்கு மிக வேண்டியவர்கள் வருவார்கள்
என்ற எதிர்பார்ப்புகளுடனும் காணப்பட்டார்கள். அல்லது
வலி இல்லாத சடுதியான மரணம் வரமாட்டாதா என்ற
எதிர்பார்ப்பு என்றும் சொல்லலாம்.
இந்த விசித்திரமன சூவுக்கு வந்த விருந்தினர்களோ வெகு
சிலரே. ஒன்றில் வார இறுதியில் வருபவர்களாகவோ அல்
லது வருடம் ஒரு தரம் தூரதேசத்திலிருந்து வருபவர்களா
கவோ காட்சியளித்தார்கள். அப்படி வந்த விருந்தினரும்
மிருகங்கள் இருக்கிற எல்லாக்கூடாரமும் போகவிரும்ப
வில்லை. ஒரு சில கூடாரங்களுக்குச் சிரித்த முகத்துடன்
சென்றார்கள். அவர்களின் சிரிப்பில் உண்மையும் இல்லை
சந்தோசமும் இல்லை.
அதிசயமாக சில விருந்தினர் பரிசுப்பொருள்களுடனும் வந்
திருந்தார்கள். அவர்கள் பார்க்க வந்த மிருகங்கள் வயோதி
பத்தின் கடைநிலை உள்ளவர்களாகத்தோன்றினார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத்தெரிந்தது வந்த விருந்
தினர் யாவரும் சிறிது கூட நேரம் அங்கு இருந்தால் விஷத்
தொற்று ஏற்பட்டுவிடுமோ எனப்பயந்து திரும்பிப்போவதிலெ
யே அவசரங்காட்டினார்கள்.
வந்த விருந்தினர்களுக்கு அவர்கள் பசி எடுத்து அழுதபோது
இந்த விசித்திர மிருக காட்சிசாலையில் உள்ள மிருகங்கள்
தான் தன் முலைப்பாலை ஊட்டி அவர்களின் பசியைப்போக்
கியவர்கள். இந்த மிருகங்கள்தான் அவர்களுக்கு உணவு ஊட்டி
அன்பைக்கொடுத்து பாதுகாப்பையும் கொடுத்தார்கள். இவர்கள்
பசியாக இருந்த போது தங்களுக்கு உணவு இல்லாத போதும்
தாங்கள் பசியுடன் இருந்துகொண்டு இவர்கள் பசியைப்போக்கி
யவர்கள்.இந்த மிருகங்கள் வலிக்க வலிக்க வேலைசெய்ததால்
தான் இவர்கள் நல்லபள்ளிக்கூடங்களில் படிக்கமுடிந்துள்ளது.
விருந்தினர்கள் வந்து போன மிருகங்களுக்கு அந்த மாலைப்பொ
ழுது பெரிதாகப்பட்டது. மாலைச்சாப்பாட்டுக்காக கையில் தட்டு
டன் அழையாவிருந்தாளியாக அன்பில்லாத உணவைப் பங்கு
போட வந்தவர்களில் ஒன்று அவன் வந்து கமரா, லாப் ரொப்
கணாணி மற்றும் செல் போன் தந்துவிட்டுப்போகிறான் என்றது.
அடுத்த கூடரத்தில் இருந்த மிருகம் கெக்கட்டம் போட்டுச்சிரித்து
விட்டு அவர்கள் இதை எல்லாம் உன்னுடன் சேர்த்துப்புதைக்கப்
போகிறார்களா என்று கேட்டது.
(வயோதிபர் இல்லங்களின் உண்மை நிலையை இப்படிவிபரிக்கிறான்)
Wednesday, October 28, 2009
மூத்தவன் படும் பாடு-பாகம்-1
கடைப்பிடிகும் தவறான சம்பிரதாயம் என்னவென்
றால் என்ன கஷ்டப்பட்டாலும் தாய் தந்தையரை
மூத்தபிள்ளைதான் பராமரிக்கவேண்டும் என்ற கடப்
பாடு.நான்கு அல்லது ஜந்து பிள்ளைகளைப்பெறும்
ஒரு தந்தை தன் குடும்ப பாரத்தைச்சுமக்க மூத்த பிள்
ளை த் தொள்கொடுக்கும்படிநிர்ப்பந்திக்கிறார். அதனால்
மூத்தபிள்ளை மேல்ப் படிப்பு படிக்கமுடியாமல் ஏதோ
ஒரு வேலைக்குப்போய்விடுகிறான். அவனின் உழைப்
பால் குடும்பம் ஓட்டப்படுகிறது. அவனுக்குக்கீழ் உள்ள
வர்கள் மேலேபடிக்கமுடிகிறது அவர்கள் பட்டதாரியா
கிறார்கள் கூடிய சீக்கிரம் நல்லநிலைக்கு வந்துவிடுகி
றார்கள். ஆனால் பாதிப்படிப்புடன் குடும்பத்திற்கு உதவப்
புறப்பட்டவன் மேலே உயரப்போகமுடியாமல் குறைந்
தசம்பளத்தில் ஏழ்மையில் உழல்வான்.
வாலிப வயது 21ல் இல்லற இன்பத்தில் திளைத்து வரி
சையாய் ஜந்து பிள்ளைகளைப்பெறும் அப்பன் தனது
தேவைக்குத் தோழ்கொடுத்த மூத்தபையனுக்கு இள
மை கழிந்து 38 வயது வந்த பின்னும் அவன் மணவாழ்க்
கையைப்பற்றிச்சிந்தியாது வாழாது இருப்பார். கடைசியில்
இந்த மூத்தபையன் தன் வெட்கத்தைவிட்டு எப்ப எனக்
குப்பெண் பார்க்கப்போகிறீர்கள் என்று கேட்டபின்பு தான்
அவசரம் அவசரமாக ஒரு பெண்ணைப்பிடித்து, அவனுக்
குப்பிடிக்குதோ அல்லபிடிக்கவில்லையோ எதுவும் கேட்
காமல் கட்டிவைத்துவிடுவார்கள். பிடிக்கவில்லை என்
று மறுப்புத்தெரிவித்தால் நீ எங்க சொல் கேட்பாய் என்ற
நம்பிக்கையில் நாங்கள் வாக்குக்கொடுத்து விட்டோம்
ஆகையால் நீ கலியாணம் செய்யாவிடில் எங்களை நீ
உயிரோடு பார்க்கமுடியாது நாங்கள் தூக்கில் தொங்கி
விடுவோம் என்று பிளாக் மெயில் பண்ணி கட்டிவைத்
து விடுவார்கள்.அவன் அதிர்ஷ்டம் செய்தவனாக இருந்
தால் வருகிற பெண் அவனுக்கேற்ற மனைவியாய் அமை
ந்து விடுகிறாள். வாழ்நாள் பூராவும் அவனுக்குத்தோள்
கொடுக்கும் தோழியாய் அவனுக்கு நின்மதியைக்கொ
டுப்பாள். அப்படி இல்லாமல் ஒரு பிசாசாக அல்லது
பிடாரியாக அமைந்து விட்டால் அவன் வாழ்நாள் முழு
வதும் நரகவேதனையைஅனுபவித்தே ஆகவேண்டும்.
சில நேரங்களில் மானம் போய் துகில் உரிந்த நிலையில்
அவமானப்பட்டுச்சீரழிந்துபோய் நடைப்பிணமாக வாழும்
நிலையை அடைகிறான்.
இந்த மூத்தவன் உதவியால் இன்று மேல் நிலைக்கு வந்த
இவனின் தம்பிமார் அண்ணா கஷ்டப்படுகிறானே என்று
அனுதாபம் காட்டமாட்டார்கள். அவன் படிக்கிற காலத்தில்
படிக்காமல் போனது அவன் தப்பு அல்லவா அதனால்தான்
கஷ்டப்படுகிறான் என்று காரணம் சொல்வார்கள். ஏழ்மை
யில் உழன்றாலும் அவன்கூடத்தான் அப்பா அம்மா வசிக்
கவேண்டும் அதுதானே முறை என்று நியாயம் வேறு
பேசிக்கொள்வார்கள்.
இதன் அடுத்த பாகம்-2 நவம்பர் 3ல் பிரசுரிக்கப்படும்.
Monday, October 26, 2009
இது தான் தமிழ் !!!
1 = ONDRU -one
10 = PATHU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -??????
1000000000000000000
1000000000000000000
1000000000000000000
1000000000000000000
One of the oldest and greatest languages in the World!!!
Proud to be a Tamilan
இது தான் தமிழ் !!!
Wednesday, October 21, 2009
தீபாவழிச்சிறப்பு நிகழ்ச்சி
தீபாவழி நிகழ்ச்சி நடத்தியிருந்தார்கள்.அதன் ஒளிப்ப
திவை 16/10/2009 ல் பார்த்து ரசித்தேன். சின்னக்குழந்தை
கள் தங்கள் குடும்பத்துடனசேர்ந்து நிகழ்சிகளை அளித்தார்
கள்.மிகத்திறமையாகவும் நன்றாகவும் அந்தக்குழந்தைக
ளின் நிகழ்ச்சி அமைந்திருந்தது. குழந்தைகளின் திறமை
யைக்காணும் யாவரும் மகிழ்ச்சியே கொள்வார்கள். நானும்
ரொம்ப் ரொம்ப ரசித்து மகிழ்ந்தேன்.
நிரம்பச்சிறுவயதிலேயே பாடலின் ராகத்தை உணர்ந்து தாளம்
தப்பாமல் இனிமையை மேம்படுத்திப்பாடியது வெகுவாகப்
பாராட்டப்படவெண்டியதே. ஒரு சில குழந்தைகளுக்கு கர்னா
டக சங்கீத ப் பயிற்சி இருந்தது. வேறு சிலர் கேழ்வி ஞானத்து
டன் பாடுபவர்களாக இருந்தார்கள். இவர்களைத்தேர்ந்தெடுத்
டு முறையாகப்பாடலைப்பாடப் பயிற்சி கொடுத்து அவர்களின்
திறமையை வெளிக்கொண்டு வந்த விஜே தொலைக்காட்சி
நிறுவனத்தினர் பாராட்டப்படவேண்டியவர்களே.
அதே போல் சிறுவர் சிறுமியரின் நடனம் என்கின்ற நாட்டிய
நிகழ்ச்சியும் நடைபெற்றது. பரதம் என்கின்ற நாட்டியம்
இல்லாமல் பெரும்பாலும் குத்துப்பாடலுக்குரிய டான்ஸ்
மூவ் மென்ரே மேடை ஏற்றியிருந்தார்கள். மைக்கல்
ஜாக்சன் அசைவைப்பின்பற்றி பிரபு தேவா SEX MOVEMENTS
தமிழ் சினிமாவில் தன் நடனங்கள் மூலம் அறிமுகப்படுத்தி
னார். அன்றைய நிகழ்ச்சியைப் பார்த்தபோது தமிழரின்
பரதம் என்கின்ற நாட்டிய முறையை மேற்கத்தைய அசைவு
நிறைந்த குத்துப்பாட்டு நடனம் சூறையாடி விடுமோ என்ற
சந்தேகம் என் மனதில் தோன்றுவதைத்தவிர்க்க முடியவில்லை.
பாடல்களைத்தேர்ந்தெடுத்துப்பாடும்போது இருவர் பாடும்
பாடல்கள் வரும்போது இரு நண்பர்கள் பாடும் பாடல் அல்லது
இரு தோழியர் பாடும் பாடல்கள் அல்லது பொதுவான பாடல்
கள் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
டூயற் பாடல்களை அப்பவும்பெண்ணும், அம்மவும்
பையனும், அண்ணனும் தங்கையும் பாடுவதைத்
தவிர்த்திருகலாம், தற்கால இளைஞர்களைத் தவிர்த்து
மத்திய வயதினருக்கு பாடப்படும் டூயற் பாடல் வரிகளின்
அர்த்தம் புரியும் போது பாடுபவர்கள் யார் யார்
எனக்கவனிக்கும் போது சிறிது மனக்கிலேசத்தையும்
சங்கடத்தையும் கொடுத்தது என்றால் மிகையாகாது.
சினிமா பின்ணணி பாடுபவர்கள் முன்புபோல் சேர்ந்து
பாடாமல் அவரவர் TRACK ஜ தனித்தனியாகவந்து பாடிப்
போவதால் அண்ணனும் தங்கையும் காதல் ரசம் ததும்
பும் டூயற் பாடல் பாடுவது பெரும் பிரச்சினையாகத்
தோன்ற வில்லை.
கலைநிகழ்ச்சிகளில் இருவர் டூயற் பாடல் பாடும் போது
உறவு முறை யைத்தவிர்த்துப்பாடுவதே சிறந்ததாகும். இசை
யை யும் மிஞ்சி பாடல் வரிலளின் அர்த்தம் புரியும் போது
அந்தப்பாடலைப்பாடும் இருவரையும் யார் யார் என இனங்
காணும்போது யாவரும் இந்தச்சங்கடத்தை உணர்வார்கள்.
வருங்காலத்தில் நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள் இதைக்கவனத்
தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
மற்றப்படி அந்த நிக்ழ்ச்சி ரொம்பச்சிறப்பான நிகழ்ச்சியாகவே
அமைந்திருந்தது. விஜே தொலைக்காட்சியினர் பாராட்டப்
படவேண்டியவர்களே.
Saturday, October 10, 2009
புவனேஸ்வரி--சினிமா--நடிகர்சங்கம்
நடிகர்சங்கப்போர்கொடி இவை பற்றிய எனது கண்ணோ
ட்டம்.
சினிமா என்பது ஒரு சாக்கடை என்பது பலருக்குத்தெரிந்த
விடையம். விபசாரமும் சினிமாவும் பாலில் கலந்த தண்ணீர்
போன்றது. சினிமாவில் நடக்கும் அந்தரங்களை வெளிக்
கொண்டுவரமுயற்சித்த பத்திரிகை நடத்துவோர் சிலர்
மர்மமானமுறையில் கொல்லப்பட்டதை முதியோர் யாரும்
மறந்திருக்க மாட்டார்கள். எனக்கு மிகப்பழைய பத்திரிகைப்
பிரதி ஒன்று பார்க்கச் சந்தற்பம் கிடைத்தது. அதில் லட்சுமி
காந்தன் என்பவரது கொலை பற்றிய தகவல் இருந்தது. இவர்
இந்துநேசன் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். அவருடை
ய பத்திரிகையில் சினிமா கதாநாயகிகளது அந்தரங்கங்களை
ஆதாரங்களுடன் வெளியிட்டார், அதனால் ஆத்திரம் அடைந்
த சினிமா உலகம் அவரைக்கொலைசெய்து விட்டது. இது
தான் அந்தப்பத்திரிகைசெய்தி.
பத்திரிகைதுறையினர் ஒன்றும் புனிதர்கள் அல்ல. இவர்கள்
பத்திரிகை ஆசிரியர்கள் என்ற பதவியில் அமர்ந்து கொண்டு
தாங்கள் நடத்தும் பத்திரிகையை ஆயுதமாகப்பாவித்து தன்
சுய லாபங்களுக்காக அதைப்பாவிப்பவர் கள். உதாரணத்திற்
கு இந்து பத்திரிகை நடத்தும் ராம் என்பவனை எடுத்துக்கொ
ண்டால் ஈழத்தமிழர் பிரச்சினையில் சிறீல்ங்கா அரசிடமிருந்
து பல மில்லியன் பணத்தைப்பெற்றுக்கொண்டு உண்மைக்கு
மாறான ஈழத்தமிழருக்குப் படு பாதகமாக எழுதிவந்த ஒரு
விபச்சாரி. இப்பவும் சிறீலங்கா அரசின் பேறோலில் இருப்ப
வன்.
தமிழ்நாட்டின் கலாச்சாரம் இன்று சீரழிந்து போய் இருப்பதற்கு
முழுக்க முழுக்க க் காரணம் விபசாரத்தை முக்கிய தொழிலா
கக்கொண்ட கோடாம்பாக்க சினிமாத் துறையாகும்.
மக்களை மாக்களாக்கினால் தான் அவர்களை அடக்கி ஆள
முடியும் எனத்தெரிந்துகொண்ட திராவிடக்கட்சிகள் சினிமா
என்ற மாயையை தமிழ்நாட்டில் படரவிட்டு எல்லோர் மனத்
திலும் கனவுத்தொழிற்சாலையில் பங்கு பெறவேண்டும்
என்ற வேட்கையை வேர் ஊன்றவிட்டுவிட்டார்கள்.அதனால்
பராம்பரியமான தமிழரின் ஒழுக்கமும் கலாச்சாரமும் அழிந்
து விபசாரிகளைக்கடவுளாகக்கும்பிடக் கோவில் கட்டும்
கலாச்சாரம் தோன்றியுள்ளது.
முந்திய காலங்களில் சினிமா ஒழுக்கக்கேடு நிறைந்த இட
மாகக் கணிக்கப்பட்டதால் குலப்பெண்கள் சினிமா பக்கம்
தலைவைத்துப்படுப்பதில்லை. ஆனால் இன்று சிலபடித்த
பெண்கள் அது சாக்கடை என்பது தெரிந்தும் சேர்வதால்
சினிமா ஒழுக்கம் நிறைந்த இடம் என்ற மாயையை ஏற்
படுத்தி வருகிறார்கள்.
ஈழத்தமிழரிடையே சினிமா மோகம் என்றும் இருந்தது
இல்லை.சினிமா ஒரு பொழுதுபோக்குச்சாதனம் என்ற
அடிப்படையில் அதை வரவேற்றார்கள்.ஈழத்தமிழ்
நாட்டில் இந்தக் கனவுத்தொழிற்சாலை அவர்கள்
மத்தியில் ஏற்படவில்லை. அதனால் சினிமா மோகம்
அல்லது சினிமாப்பைத்தியம் யாருக்கும் ஏற்படவில்லை.
அத்துடன் ஈழமக்கள் நூறு வீதம் கல்வி அறிவு பெற்றவர்
களாக இருந்ததால் சிறப்பான தொழில்களைச்செய்து வாழ்
வில் மேல் நிலைக்கு ச்சென்றார்கள். கனவுத்தொழிற்சாலை
யை நம்பி தங்கள் வாழ்க்கையை அழிக்கவேண்டிய தேவை
யை அவர்களுக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை.
சினிமாவினால் ஏற்படும் கலாச்சாரச்சீரழிவைக் கண்டு கொண்
ட தமிழ் ஈழத்தலைவர் பிரபாகரன் தன் ஆளுகைக்குட்பட்டபிர
தேசங்களில் தமிழ் நாட்டு ஆபாசச்சினிமாவை முற்றாகத்தடை
செய்திருந்தார். அவர் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில்
வாழ்ந்த தமிழ் ஈழ இளைஞர்கள் யாரும் சினிமா கதாநாயகிகளை
தங்கள் கனவுக்கன்னி என்று அறிவிக்க வில்லை.
ஆனால் இப்போது புலி ஆட்சி ஒழிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்கா
ல ஈழ நாட்டு இளைஞர் சிலர் தமிழ்நாட்டுச்சினிமா நாயகிகளைத்
தங்கள் கனவுலக்கன்னி என்று வெளி வெளியாக அறிவிக்கிறார்
கள். இன்னும் ஒரு சிலர் மேலும் ஒரு படி மேலே போய் த்திரையில்
தங்கள் கனவுக் கன்னி தோன்றும் போது தங்கள் ஆண் உடம்பு
விளித்துக்கொள்வதாக க்குறிப்பிடுகிறார்கள். இந்நிலை குறித்து
ஒவ்வொரு யாழ் தமிழனும் வெட்கப்படவேண்டும்.
சினிமா நாயகிகள் நடத்தை கெட்டவர்கள் அவர்களைத் தங்களுடன்
இணைத்துக்கதைத்தால் தங்கள் மானம் போய்விடும் என்று அஞ்சி
ய பரம்பரை இன்று தன் வாரிசுகள் அதே விபச்சாரிகளைக் கனவுக்
கன்னி என்து விளிப்பது குறித்து வெட்கப்பட்வேண்டும்.
அது பழையகாலம் இது புதிய காலம் அதனால் பரத்தையாய்ப் போ
ன நாயகிகள் இன்று கற்புக்கரசியாக மாறிவிட்டார்களா?
அப்படி மாறியிருந்தால் புவனேஸ்வரிகள் தோன்றவேண்டிய
தேவை ஏற்பட்டிருக்காதல்லவா?
சாக்கடை சாக்கடைதான் என்றும் புனித கங்கையாக மாறமுடி
யாது.
Tuesday, September 29, 2009
நகைச்சுவை:- ஜ. நா வின் கணக்கெடுப்பு
கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில்
உலகின் மற்றப் பகுதியில் ஏற்பட்டுள்ள உணவுப்
பற்றாக்குறைக்கு என்ன தீர்வு என்று உங்கள்
உண்மையான அபிப்பிராயத்தைத்தெரிவியுங்க்ள்
என்று கேட்டிருந்தார்கள்.
அந்த அவர்களின் கணக்கெடுப்பு பெரும் தோல்வி
யைச்சந்தித்தது.
ஆபிரிக்காவில் உள்ளவர்களுக்கு "உணவு " என்
றால் என்ன என்று தெரியவில்லை.
இந்தியாவில் உள்ளவர்களுக்கு "உண்மை" என்
றால் என்ன என்று தெரியவில்லை.
அ ய்ரோப்பாவில் உள்ளவர்களுக்கு "பற்றாக்குறை"
என்றால் என்ன என்று தெரியவில்லை.
சீனாவில் உள்ளவர்களுக்கு "அபிப்பிராயம்" என்
றால் என்ன என்று தெரியவில்லை.
மத்தியகிழக்கில் உள்ளவர்களுக்கு "தீர்வு" என்றால்
என்ன என்று தெரியவில்லை.
தென் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு " தயவு"
என்றால் என்ன என்று தெரியவில்லை.
அமெரிக்கர்களுக்கு " உலகின் மற்றப்பகுதி" என்
றால் என்ன என்று தெரியவில்லை.
Monday, September 28, 2009
கடவுள், காதல், பணம் அழகு என் பார்வையில்
மற்றுமொரு தொடர் பதிவு.
பலர் எழுதி விட்டார்கள் சிலரின் விளக்கம் என்னையும்
விளக்கங்கொடுக்கத்தூண்டியது. அதனால் யாரும் அழைக்
காமலே தொடரில் நுளைகிறேன் வரவு எப்படியிருக்குமோ
நான் அறியேன்.
முதலில் கடவுள்.
எம்மை மீறிய ஒரு சக்தி தொழில்படுகிறது. அது கடவுளா
இல்லையா. சிலர் இயற்கை என்கின்றனர். வேறு சிலரோ
சட்டதிட்டங்களுக்காக கடவுளைக்கொண்டுவந்தார்கள்
என்கின்றனர்.ஆசாரம் மிக்க இந்துக் குடும்பம் என்பதால்
ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால்
இன்று 50,000 மக்களைக்காப்பாற முடியாத கடவுள் இருந்
தால் என்ன இருக்காவிட்டால் என்ன என்றாயிற்று
யாருக்கும் தீமைசெய்யாது சத்தியவந்தனாக வாழ்ந்தால்
கடவுளைத்தேட வேண்டியஅவசியமில்லை.
காதல்.
காமம் கலந்ததுதான் மானிடக்காதல். ஒருசிலர் தெய்வீகக்
காதல் என்பர். உடல் சங்கமத்தை நாடும் காதல் எப்படிதெய்
வீகக்காதலாகும். காதல் ஒரு பருவத்தில் இன்றியமையா
தது.வாழ்வில் காதல் வந்து போனது ஆனால் பாதிப்பு அடை
யவில்லை. நான் என் மனைவியை ஆழமாக நேசிக்கிறேன்.
பணம்.
இந்த உலகையே ஆட்டிப்படைப்பது இந்தப்பணமே.இது
இல்லாவிட்டால் ஒரு அணுவும் அசையாது. பணத்தைத்
தேடி ஓடும் ஓட்டம் பலருக்கு கலாசாலைப்படிப்பு முடிந்
ததும் தொடங்கிவிடுகிறது பணத்தைத்தேடி ஓடுவதில்
இளமையைத்தொலைத்து முதுமைவரும்வரை ஓய்வில்லா
ஓட்டமாகிறது. இவர்கள் வாழ்கையை அனுபவிப்பதில்லை.
ஒரு சிலர் வசதியான பின்னணியில் வாழ்கையை ஆரம்
பிப்பதால் ரசித்து அனுபவித்து வாழ்கிறார்கள். பணம்
எனக்கு என்றும் பிரச்சினையாக இருந்ததில்லை.மற்ற
வர்களுக்கு உதவ எனக்குப் பணம் தேவைப்படுகிறது.
அதனால் அதை நோக்கிய பயணம் தொடர்கிறது. இருந்
தும் நான் திருப்தியாக வாழ்கிறேன்.
அழகு.
மனநிலையைப் பொறுத்ததுதான் அழகு.அழகை ரசிக்க
நுண்ணிய மனம் வேண்டும். கலாரசிகனாலேயே அழகை
ஆராதிக்கமுடியும். குழந்தையின் சிரிப்பு எல்லோருக்கும்
அழகாகவே தோன்றும்.யார் அழகு ஆணா அல்லது பெண்ணா
எனக்கேட்டால் காவியங்கள் பெண்ணை அழகு என வர்ணித்
தாலும் ஆண்தான் அழகு. சிற்பி சிலை வடிவம் கொடுக்கும்
போது ஆண் சிலையை நிர்வாண மாகவேபடைப்பவன். துகில்
சுற்றியே பெண்ணைப்படைக்கிறான். நிர்வாணத்தில் ஆண்
தான் அழகனாகிறான். இதுதான் உண்மை
இந்தத்தொடர் பதிவு பல கோணங்களை எடுத்து வருகிறது.
அப்படி இருந்த போதிலும் நான் யாரையும் அழைக்கவில்லை
விரும்புபவர்கள் தொடரலாம். விடைபெறுகிறேன்.
Saturday, September 26, 2009
ஒரு தந்தையின் கோரிக்கை
யில் ஒரு தொடர் ஈ மெயில் என்னை வெகுவாகப்பா
தித்துவிட்டது. அது ஆங்கிலத்தில் இருப்பினும் அதை
அப்படியே பகிர்ந்து கொள்ளவிளைகிறேன். ஒரு ஆபிரிக்க
இளைஞன் 29 வயது மணம் முடித்து இனிமையாகச்
சென்றுகொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் காதல்
வாழ்வின் சின்னமாய் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
குழந்தைக்கு பத்து மாதம் நிறைகையில் அக்குழந்தைக்கு
மூளையில் ஒரு கட்டி இருப்பதாக அவர்களின் டாக்டர்
கூறுகிறார். குழந்தை பிழைக்கவேண்டுமென்றால் ஒரு
ஆப்பிரேசன் என்கிற சத்திர சிகிச்சை செய்யவேண்டும்.
அதர்க்கு அவர்களுக்கு நிறையப்பணம் தேவை. ஆனால்
அவர்களோ ஏழைகள். இந்த நிலையில் A O L ம் Zdnet
என்கின்ற இரு நிறுவனங்களும் உதவி செய்ய முன்
வந்தன. தந்தையை ஒரு கவிதையை எழுதி ஈ மெயில்
முலம் அனுப்பும்படியும் அந்த ஈமெயில் எத்தனை பேர்
திறக்கிறார்களோ அதைக்கணக்குப்பண்ணி ஒவ்வொருவ
ரும் மூன்று பேருக்கு அனுப்பினால் அதற்கு 32 சதம் சிம்பா
புவே பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
அந்த தந்தை எழுதிய கவிதை என் மனதை நிரம்ப வருத்தி
யது ஒவ்வொரு தந்தையையும் இது தட்டி எழுப்பும் என்பது
என் நம்பிக்கை. அப்பாடலை ஆங்கிலத்தில் உள்ளபடியே
கீழே தந்திருக்கிறேன். அவர்களின் ஈ மெயில் தேவைப்
ப்டுபவர் என்னுடன் தோடர்பு கொண்டால் அனுப்பிவைப்
பேன். என்து ஈ மெயில் mthevesh@gmail.com.
A sad Dad's poem..........
This is a beautiful poem. There is an appeal from a Zimbabwean couple at the bottom of message, not asking for anything more than that you hand the poem on............
The husband wrote the poem.
TO MY CHILD
Just for this morning, I am going to
smile when I see your face and laugh
when I feel like crying.
Just for this morning, I will let you
choose what you want to wear,
and smile and say how perfect it is.
Just for this morning, I am going to step
over the laundry and pick you up and take you to
the park to play.
Just for this morning, I will leave the
dishes in the sink, and let you teach me how to put
that puzzle of yours together.
Just for this afternoon, I will unplug
the telephone and keep the computer off, and sit with
you in the backyard and blow bubbles.
Just for this afternoon, I will not yell
once, not even a tiny grumble when you scream and
whine for the ice cream truck, and I will buy you one
if he comes by.
Just for this afternoon, I won't worry
about what you are going to be when you grow up, or
second guess every decision I have made where you are
concerned.
Just for this afternoon, I will let you
help me bake cookies, and I won't stand over you
trying to fix them.
Just for this afternoon, I will take us
to McDonald's and buy us both a Happy Meal so you can
have both toys.....
Just for this evening, I will hold you in
my arms and tell you a story about how you were
born and how much I love you.
Just for this evening, I will let you
splash in the tub and not get angry.
Just for this evening, I will let you
stay up late while we sit on the porch and count all the stars.
Just for this evening, I will snuggle
beside you for hours, and miss my favourite TV shows.
Just for this evening when I run my
finger through your hair as you pray, I will simply be
grateful that God has given me the greatest gift ever given.
I will think about the mothers and
fathers who are searching for their missing children, the
mothers and fathers who are visiting their children's
graves instead of their bedrooms. The mothers
and fathers who are in hospital rooms
watching their children suffer senselessly and screaming
inside that little body
And when I kiss you goodnight I will hold
you a little tighter, a little longer. It is then,
that I will thank God for you, and ask him for
nothing, except one more day.................
Hi! I am a 29-year-old father. My wife and I have had a wonderful life together.. God blessed us with a child too. Our daughter's name is Rachel and she is 10 months old. Not long ago did the doctors detect brain cancer in her little body....
There is only one way to save her and that is an operation. Sadly we don't have the money for the operation. AOL and Zdnet (in Zimbabwe ) have agreed to help us.
The only way they can help is this: If you send this email to other people<>AOL will track this email and count how many people get it. Every person that opens this email and sends it to at least 3 people will give us 32c. (in Zimbabwe dollars) Please help us.
It hardly takes a minute for you to forward this to your friends, Please do it.
God Bless You!!
Saturday, September 19, 2009
ஈழத்தமிழரிடம் மாற்றம் தேவை
பல விடயங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். முதல் தேவை
யானமாற்றம் அளவுக்கதிகமான சுயநலத்திலிருந்து மட்டுப்
படுத்தப்பட்ட சுயநலத்திற்கு மாறவேண்டும்.பொதுநலம் பே
ணப்படவேண்டும்.சமுதாய விழிப்பு ஏற்படவேண்டும்.எனக்
கு ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே என்ற சுயநலநோக்கு
ஒழிக்கப்படவேண்டும். யார்குத்தி அரிசியானாலும் சரி தமிழ
ருக்கு விடிவு வேண்டும் என்ற மனநிலை எல்லாத்தமிழரிட
மும் ஏற்படவேண்டும்.ஈழத்தமிழரிடம் இன்றுவரை ஏற்படா
த முக்கியவிடயமானஒற்றுமை முதலில் ஏற்படவேண்டும்.
முதன்முதலில் Crab Mentality என்று சொல்லப்படுகிற மனப்
பான்மையில் இருந்து விடுபடவேண்டும்.
கனடா நாட்டுக்குவந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜென்சி
காரர் மூலம் கனடா வந்து சேர்ந்தவர்களே. அப்படி வந்து சேர்ந்த
ஒருவர் தான் வந்து சேர்ந்ததும் குடியேற்ற அதிகாரிகளிடம் என்ன
சொன்னார் என்பதை இப்போது கீழே தருகிறேன்.
இவர் ஒரு ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர். அவரை அனுப்பி
வைத்த ஏஜென்சிக்காரன் அவரிடம் ரொரன்ரோ விமான
நிலையம் அடைவதற்கு 40 ந்மிடங்கள் இருக்கையில் உங்
கள் பிரயாணப்பத்திரத்தை அழித்துவிட்டு விமான் நிலையம்
அடைந்த்தும் அகதிநிலை கோருங்கள் எல்லாம் நல்லமுறை
யில் முடியும் என்று கூறி அனுப்பியிருக்கிறார். அதன் படி
இவர் எது வித பிரச்சினையும் இன்றி விமான்நிலையம்
அடைந்தார். ஆனால் ஏஜென்சிகாரன் சொன்னமாதிரி
ஆவணங்களை அழிக்கவில்லை. இவர் முறை வந்து குடி
வரவு அதிகாரியிடம் விபரம் தெரிவிக்கும் போது அவர்
பிரயாணஞ்செய்த பிரயாண அட்டையை அவரிடங்கொ
டுத்து இதில் என் படத்தை ஒட்டி அனுப்பிவைத்தார்கள் இப்ப
டித்தான் ஏஜென்சிகாரர் ஆட்களை அனுப்பிவைக்கிறார்
கள் என்று விளக்கங்கொடுத்தார். அதன் அர்த்தம் என்ன
வென்றால் நான் பிரச்சினை இல்லாமல் வந்துசேர்ந்து
விட்டேன் இனிமேல் யாரும் வரத்தேவையில்லை என்ற
மனப்பான்மைதான். இந்தச்சுயநலம் ஒழிக்கப்படவேண்டும்.
இன்னுமொருசம்பவம் கீழே தருகிறேன் அதையும் பாருங்
கள். நாலு தமிழரை ஒரு ஏஜென்சிக்காரன் அனுப்பிவைத்
தான் அவர்கள் வரும் வழியில் ஒரு விமானநிலையத்தில்
ஒருவரை மறித்துக்கொண்டு மற்றமூவரையும் மேற்
கொண்டு போக அனுமதித்தார்கள். தடுக்கப்பட்டவர் தப்பி
போறவர்கள் போகட்டும் என்று பெருந்தன்மையாய் நினைக்
கவில்லை அந்த அதிகாரியிடம் அவர்கள் மூவரையும் விட்ட
நீ ஏன் என்னை மட்டும் மறிக்கிறாய் என்று மற்றவர்களை
யும் காட்டிக்கொடுத்து அவர்கள் பிரயாணத்தையும் தடுத்து
விட்டார். அவரின் சுயநலப்போக்கால் மற்ற மூவரும் நஷ்டப்
படவைத்துள்ளார் அல்லவா. இதுமாதிரி பல சம்பவங்கள்
நிறைய எழுதலாம். இந்த சுயநல மனப்பான்மை இல்லாது
ஒழிக்கப்படவேண்டும்.
ஒரு சமுதாயம் சுதநதிரம் பெறவேண்டுமானால் அந்தச்ச
முதாயம் முதலில் ஒற்றுமையாகச்செயல்படவேண்டும்.
ஈழத்தமிழரிடம் இல்லாத ஒன்று ஒற்றுமைப்படமுடியாததாகும்.
அன்று செல்வநாயகம், பொன்னம்பலம் &சுந்தரலிங்கம்
போட்டிபோட்டார்கள். அதன் பின்பு பிரபாகரன் மற்றப்
போராளிக்குழுக்கள் போட்டிபோட்டார்கள். இன்று
டக்ளஸ், கருணா, பிள்ளையான், விடுதலைக்கூட்டு
முன்னணி என்று போட்டிபோடுகிறார்கள்.இவற்றை
சரியாகப்புரிந்து கொண்டதால சிங்கள தலைவர்கள்
பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்து தங்கள் நிகழ்ச்சி
நிரல்படிகாரியங்களை ஆற்றிவருகிறார்கள்.
ஒற்றுமை இல்லாததால் இலங்கையில் ஈழத்தமிழரின் இருப்
பு கேள்விக்குறியாக மாறிவருகிறது. இவ்வளவுதூரம் அழிவு
ஏற்பட்டபின்பும் இன்னும் ஈழத்தமிழரிடையே ஒற்றுமை
ஏற்படவில்லையே. புலம்பெயர்ந்த தமிழரிடையேகூட
ஒற்றுமை இல்லை என்பது மிக்கவேதனையாக இருக்கிறது.
எல்லாரும் ஒன்று சேர்ந்தால் முள்வேலிக்குள் அடைபட்ட
மக்களுக்காவது விடுதலையை வேண்டிக்கொடுக்கலாம்.
ஈழத்தமிழரின் இருப்புக்கு ஏதாவது வழிசெய்ய வாய்ப்பு
ஏற்படும் என்பதையும் உறுதியாகக்கூறலாம்.ஈழத்தமிழரே
விழியுங்கள் ஒற்றுமையாகுங்கள் உங்கள் உறவுகளின்
சுதந்திரத்திற்கும் நல்வாழ்வுக்கும் ஆவனசெய்யுங்கள்.
Thursday, September 03, 2009
யார் மானத்தமிழர்
சில பொருட்கள் வாங்கச்சென்றிருந்தேன். வாங்க வேண்டி
யவற்றை வாங்கிக்கொண்டு வெளியேறும் போது எனது
இந்திய நண்பர் சேகரைச்சந்தித்தேன். என்னைக்கண்டதும்
என்ன ஈஸ்வர் சார் செளக்கியமா என்றார். நானும் நான்
நலமாக இருக்கிறேன். எப்படி உங்கள் சுகங்கள் வீட்டில்
எல்லோரும் சுகமாக இருக்கிறார்களா என விசாரித்தேன்.
அவரும் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்றார்.
நான் சரி வாருங்கள் காப்பி சாப்பிடுவோம் எனக்கூப்பிட்
டேன். அவரும் சரி என்று என்னுடன் வந்தார். அருகிலுள்ள்
ரிம் கோட் டனில் காப்பி வங்கிகொண்டு அந்த கடைக்கு
முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு
எங்கள் பேச்சைத்தொடர்ந்தோம்.
சேகர்:- சேர் நீங்களும் உங்களின் ஆட்களும் தான் உண்மை
யான தமிழர், நாங்கள் எங்களைத்தமிழர் என்று சொல்ல
முடியாது. நாங்கள் எல்லாம் சுத்த கோழைகள் எங்களிடம்
மருந்துக்குக்கூட வீரம் கிடையாது.
நான் :- ஏன் அப்படிச்சொல்லுகிறிர்.
சேகர்:- நீங்கள் எல்லோரும் தன்மானம் மிக்கவர்கள்,உஙகளிடம்
மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று, சமுதாயப்பற்று
முதலியன இருக்கின்றன.காக்கைக்கூட்டம் போல் உங்களுக்
கு ஒன்றென்றால் எல்லோரும் ஒன்று கூடி ஆர்ப்பட்டம்,
கதவடைப்பு, ஊர்வலம் என்று உங்கள் ஒற்றுமையைக்
காண்பிக்கிறீர்கள். உங்கள் எல்லோரையும் நினைத்தால்
பெருமையாக இருக்கிறது. ஆனால் ஒருவிசயத்தில்
உங்கள் எல்லோர் மீதும் எனக்கு கோபமும் வருத்தமும்
இருக்கிறது.
நான் :- என்ன விசயத்தில் கோபம் எதற்கு மனவருத்தம்.
சேகர் :- நீங்கள் யாரையும் மன்னிக்க மாட்டேன் என்று அடம்
பிடிக்கிறீர்கள்.
நான் :- இல்லைச்சேகர் நீங்கள் எங்களைத்தப்பகப் புரிந்து கொண்டீர்
கள். நாங்கள் துரோகத்தையும் துரோகி களையும் தான் மன்னிப்
பதில்லை. எதிரியை அறுபத்தைந்து வீதம் மன்னித்து விடுகிறோம்
ஏன் மிகுதி முப்பைத்தைந்து வீதம் வைத்துக்கொள்கிறோம் என்றால்
அவன் மறுபடி தப்பு பண்ணாமல் இருக்கிறானா என் எச்சரிக்கையாக
இருக்கிறோம்.
சேகர்:- நீங்கள் என்ன சமாதானம் சொன்னலும் நாங்கள் மன்னித்து மறந்து
விடுவோம்.
நான் :- சேகர் அப்படி மன்னித்து மறந்து விடுவதால்தான் உங்கள் அரசியல்
வாதிகள் கடந்த அறுபது வருடங்களாக மறுபடி மறுபடி உங்கள்
தலையில் மிளகாயை அரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சேகர் :- தமிழனுக்கு முகவரி கொடுத்ததே ஈழத்தமிழன் தான். உங்களால்
தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்துவிடும் என்று பல மாக நம்பினேன்
சார். ஆனால் எல்லாம் தவிடுபொடியாகிப்போய் விட்டது. பயாபரா
மாதிரி தோற்றுவிட்டது.
நான் :- சேகர் நீங்கள் சொல்வது தப்பு பயாபரா முற்று முழுசாகத் தோற்க
வில்லை. அந்தப்பிரச்சினையை அடக்க முற்பட்ட நைஜீரிய அரசு
பல மாநிலங்களாகப்பிரித்து அந்தந்த பிராந்திய மக்களுக்கு மாநில
சுயாட்சி வழங்கி விட்டது. இப்போது பயாபரா மக்களும் மாநில
ஆட்சியில் நிம்மதியாகவாழ்கிறார்கள்.
சேகர் :- இது நாள் வரை இச்செய்தி எனக்கு தெரியாமல் போய்விட்டது.
நான் :- சேகர் எந்த ஒரு இனத்தின் சுதந்திர வேட்கையை அடக்கி விட
முடியாது. அதனால் ஈழவிடுதலை தோற்கவில்லை. தற்போ
தைக்கு உள்ள சூழநிலையால் அடங்கிப் போனது போல் தோற்றம்
அளிக்கிறது. காலம் கனிந்து வரும்போது மறுபடி ஆர்ப்பரித்து
எழும் விடுதலையை அடையும். கவலையை விடுங்கள்.
இத்துடன் எங்கள் பேச்சை முடித்துக்கொண்டு விடைபெற்றோம், அவர்
தன் வழி போனார் நான் என் வீடு வந்து சேர்ந்தேன். நல்லது நண்பர்களே
உங்கள் அபிப்பிராயங்களைத்தெரிவியுங்கள். மறுபடி சந்திப்போம்.
Friday, August 28, 2009
[இலங்கைத் தமிழர் பிரச்சினை]
நூறு சத வீதமான இந்தியர்களுக்குத்தெரியாது.
அவர்களுக்கு இந்தியச்சரித்திரமே தெரியாதது
இவர்களுக்கு எப்படி ஈழத்தமிழர் பிர்ச்சினை புரியும்.
அதனால் விரிவாக ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி
ய அறிவை இந்தியத்தமிழர்களுக்கு தெரியவைக்க
முயற்சிக்கிறேன்.அதிலும் குறிப்பாக சித்தூர் எஸ்
முருகேசன் போன்றவர்களுக்கு இது சமர்ப்பணம்.
இலங்கையின் பூர்வீக குடிகளே தமிழர்கள் என்பது
பெரும்பாலனவர்களுக்குத்தெரிவதில்லை.
1505ல் போர்த்துக்கீசர் இலங்கையைப்பிடிக்கும்
போது இலங்கையில் தனித்தனியான மூன்று
இராச்சியங்கள் இருந்திருக்கின்றன. அதில் இரண்டு
சிங்கள இராச்சியங்களும் ஒரு தமிழ் இராச்சியம்
என்று சொல்கின்ற யாழ்ப்பண இராச்சியம் வடக்கு
கிழக்கு இணைந்த பகுதியில் இருந்திருக்கிறது.இது
சம்பந்தமான ஆவணங்கள் இன்றும் போர்த்துக்கல்
அரசு ஆவணக்காப்பகத்தில் பாதுகாப்பாகவைத்திருக்
கிறார்கள்.
1779ல் டச்சுக்காரர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்
பற்றினார்கள். இவர்கள் காலத்தில் தேசவழமைச்சட்டம்
Roman Dutch Law வையும் நடைமுறைக்குக்கொண்டு
வந்தார்கள். இன்றும் யாழ்ப்பாணத்தில் இவர்களால்
அறிமுகப்படுத்தப்பட்ட தேசவழமைச்சட்டம் தான்
நடைமுறையில் இருந்து வருகின்றது.
பிரித்தனியர் 1789ல் மூன்று இராச்சியங்களையும்
வெவ் வேறு காலப்பகுதியில் கைப்பற்றினார்கள்.
அவர்கள் ஆவணங்களிலும் தனித் தனியாக இறமை
யுள்ள மூன்று இராச்சியங்கள் இருந்ததை ஆவணப்
படுத்தியுள்ளார்கள். இன்றும் லண்டனில் உள்ள குடி
யரசு ஆவணப்பகுதியில் இவற்றை யாரும் பார்வை
யிடலாம்.மூன்று இராச்சியங்களையும் தனித்தனியாக
நிர்வகித்த பிரித்தானியர் 1815ல் ஏற்பட்ட கண்டி உடன்
பாடு காரணமாக நிர்வாக வசதிக்காக மூன்று இராச்சி
யங்களையும் ஒன்றாக்கி ஏக இலங்கை யாக 1948ம்
வருடம் வரை ஆண்டார்கள்.
இந்தியத்தலைவர்கள், தமிழ்நாட்டுத்தலவர்கள் உட்பட
இலங்கைத்தமிழர்கள் பிரித்தனியரால் தோட்டத்
தொழிலாளர்களாகக்கொண்டுபோனவர்கள்தான் எனறு
தவறாக நினைக்கிறார்கள்.
1648 ல் பிரித்தானியர் தோட்டத்தொழிலாளராக இந்தி
யத்தமிழரைக் கொண்டுவருமுன்பே இலங்கையின் வடக்
கு கிழக்கு மாகாணங்களில் இலங்கைத்தமிழர்கள் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.5 ஆயிரம் வருடங்களாக வடகிழக்கு
மாகாணங்களில் தமிழர் பூர்வீக குடிகளாக வாழ்ந்து கொண்
டிருக்கிறார்கள் என்பது சரித்திர பூர்வமான உண்மை.
தினகரன், தினமணி, இந்து பத்திரிகைகளில் எழுது
வதைப்படித்துவிட்டு அதுதான் இலங்கைத்தமிழர்
சரித்திரம் என நினைகும் ஞானசூன்யங்கள் நிறைந்த
இடம்தான் தமிழநாடு மாநிலம். அண்ணாத்துரை,
இராஜாஜி, ம.பொ.சி, பெரியார் போன்றவர்களுக்கு
நான் எழுதியுள்ள இலங்கைத்தமிழர் சரித்திரம் அத்து
படி அதனால்தான் 1967ல் சிறிமாவோ சாஸ்திரி ஒப்
பந்தம் கையெழுத்தானவுடன் அறிஞர் அண்ணா
"வீழ்ந்து பட்டதமிழர்கள்" "துரத்தி அடிக்கப்பட்ட
தமிழர்கள்" என இரு பிரிவுத்தமிழர்கள் இலங்கை
யில் வாழ்கிறார்கள் எனத்தெரிவித்திருந்தார்
இந்தியசரித்திரமே ஆக்கபூர்வமாகத்தெரியாத கிணற்றுத்
தவளைகளுக்கு இலங்கைத்தமிழர் சரித்திரம் எப்படித்
தெரியும். அதனால் தான் தெரியாமல் உளறவேண்டாம்
என்று கத்துக்குட்டியான சித்தூர்.எஸ்.முருகேசனுக்குத்
தெரிவித்திருந்தேன்.கற்றது கைமண் அளவு கல்லாதது
உலகளவு என்று ஆன்றோர் சொல்லியுள்ளார்கள்.எனக்
கு எல்லாம் தெரியும் என்று அகம்பாவத்துடன் துள்ளிக்
குதிப்பவர்கள் எதுவும் தெரியாத கத்துக்குட்டிகள் என்று
நான் கூறுகிறேன்.அது இந்தச் சித்தூர்.எஸ்.முருகேசன்
போன்றோருக்கும் பொருந்தும்.
1948 ல் இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கும் போது
இலங்கைத்தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அரச
மைப்புச்சட்டத்தில் 29 வது சரத்து என்று ஒன்றைச்
சேர்த்திருந்தார்கள். அதை 1972 ல் கொண்டுவந்த
புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நீக்கிவிட்டார்
கள்.இதை எதிர்க்கவேண்டிய பிரித்தனியர் அமைதி
யாக் இருந்து விட்டார்கள்.பிரித்தானியர் விட்ட
பிழையால் இலங்கைத்தமிழர் இவ்வளவு சொல்லொ
ணாத்துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
1956 ல்,1958 ல்,1961 ல்,1962 ல்,1972 ல்,1977 ல்,
1983 ல் ந்டைபெற்ற தமிழர் அழிப்பு எல்லாம் பிரபாக
ரனின் கட்டமைபு வருமுன் நடைபெற்றவை.இவை
நடந்த காரணங்களால்தான் பிரபாரனின் கட்டமைப்பு
ஏற்படவேண்டிய தேவை ஏற்பட்டது. இலங்கைத்தமி
ழர் பிரச்சினைக்கு பிரபாகரன் காரணமில்லை.சிங்க
ளவரின் பேரினவாத அரிசியல் தான் காரணம் என்பதை
அறிந்துகொள்ளவும்.
பூர்வீக குடிகள்தான் தாங்கள் இழந்த உரிமையைக்கேட்கிறார்
களே அல்லாமல் வந்தேறு குடிகள் அரசுரிமை கேட்க
வில்லை என்பதை அறிந்துகொள்ளவும்.
Sunday, August 23, 2009
[ஈழம் துளிர் விடும்]
உரிமை இவைகளுக்காகபோராடி வருகின்றார்கள்.முதலாம் யுத்தம்
ஏற்படுவதற்கு முன்பு இருந்தநாடுகளின் எண்ணிக்கை யுத்தம் முடிந்ததும்
பல புதிய நாடுகளின் வரவால் உயர்ந்தது. அதன் பின்பு இரண்டாவது உலக
மகாயுத்தம் ஏற்பட்டு முடிவடைந்ததும் மேலும் பல நாடுகள் புதிதாகத் ஏற்பட்டன.
எப்படி ஏற்பட்டன என்று ஆராய்ந்தால் முன்பு மூன்று அல்லது நான்கு இனங்கள்
சேர்ந்து ஒரு நாடாக வாழ்ந்துவந்த நாடு தனித்தனி இனங்களுக்கான் நாடாகப்பிரிவு
பெற்றுப் புதுநாடுகளாக விரிவடைந்தன.
ஒவ்வொரு இனமும் அடிமைநிலையிலிருந்து சுதந்திர நாடாகப் பரிணமிக்கப்
பலவருடங்களாகப்போராடி வருகின்றன். அந்தப்போராட்டங்களை அந்த இனங்களை
அடக்கி ஆளும் அரசாங்கங்கள் பல அடக்குமுறைகளைப் பிரயோகித்து எதிர்த்து
வருகினறன. அப்படி இருந்தும் பல நாடுகள் தனித்தோ அல்லது வேறு ஒரு
பலம்வாய்ந்த நாட்டின் உதவியுடனோ சுதந்திர நாடாகப்பரிணமிக்கின்றன்.
பல்லாயிரம் வருடங்களாக தம்மை ஆண்ட ஈழத்தமிழர் ஆங்கில ஏகாதிபத்தியத்திடம்
இழந்த இறமையை மீட்க கடந்த 60 வருடங்களாகப்போராடி வருகிறார்கள். முதன்
முறை இலங்கைஅரசு ஆங்கிலேயர் வழங்கிய சிறுபான்மையினற் கான அரசியல்
அமைப்புக்கொடுத்த பாதுகாப்பை நீக்கியபோது பிரித்தானிய அரசு தலையிட்டிருக்கவேண்டும்.
ஏன் எனில் அவர்கள் விட்டபிழையாலேயே தமிழர் துன்பங்களுக்கு முகம் கொடுத்து
வருகிறார்கள் என்பது அவர்கட்கு காலம் பிந்திக்கிடைத்த ஞானோதயம். கவுரவமாக தன்
பிழையை ஏற்கும் பண்பு இல்லாத அகங்காரம் நிறைந்த அரசாக இருந்ததால் அவர்கள்
தலையிடாமல் அமைதிகாத்தார்கள்.
இந்திய பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச்சட்டம் கொண்டு வந்தபோது எதிர்க்க வேண்டிய
இந்திய அரசு எதற்கும் தகுதி அற்ற காஷ்மீரப் பிராமணன் நேரு அமைதி காத்ததால்
பல லட்சம் மக்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள். இது இந்தியா செய்த இமாலயத்
தவறு நம்பர் ஒன்று. அதன் மேல் நேரு கொத்தலாவலை செய்து கொண்ட ஒப்பந்தம்
இந்தியா செய்த இமாலயத்தவறு நம்பர் இரண்டு. சிறிமாவும் சாஸ்திரி செய்து
கொண்ட ஒப்பந்தம் இந்தியா செய்த தவறு நம்பர் மூன்று. இந்திரா காந்தியின்
வழிநடத்தலில் இலங்கைத்தமிழர் பிரச்சினையில் இறுதி முடிவை அண்மித்த
இராஜதந்திர நகர்வை மேற்கொண்ட ஜி. பார்த்தசாரதியை விலக்கி பிரச்சினையின்
ஆழம் அறியா வடநாட்டுக்காரனான ரொமேஷ் பண்டாரியைக்கொண்டு வந்தது
இந்தியா செய்த இமாலயத்தவறு நம்பர் நாலு.
பிரச்சினைகுரியவர்கள் இலங்கைத்தமிழரும் பெரும்பான்மைச்சிங்கள்வரும்மட்டுமே. அப்படியிருக்கையில் பிரச்சினை குரியவர்களை ஒப்பந்தம் போடவைத்து அதை
நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் பொறுப்பைமட்டும் எடுக்க வேண்டிய
இந்தியா தானே ஒப்பந்தக் காரராக மாறியது இந்தியா விட்ட தவறுகளில்
முதன்மையான இமாலயத் தவறு.
தமிழர் தாயக நிலம் ஈழத்தமிழரால் கைப்பற்றப்பட்டு தனி ஆட்சி நடத்திவந்த கால
நிலையில் அவர்கள் ஆட்சியை மாநில ஆட்சியாக ஏற்றுத்தமிழர்களுக்குரிய உரிமைகள்
பெற ஆவனசெய்யவேண்டிய இந்தியாவும் தார்மீக கடமை உள்ள பிரித்தானியாவும்
போராடிச்சுதந்திரம் பெற்று சுதந்திரதேவி சிலையைநிறுவிய அமெரிக்காவும்
தமிழர்களுக்குரிய உரிமைகளைக்கொடுங்கள் என நிற்பந்திக்க வேண்டிய கடப்பாடு உடை
யவர்கள் நீதிக்குப்பிறம்பான முறைகளில் ஈடுபட்டு தமிழர் 30 வருடங்களாகக்கட்டி
எழுப்பிய கட்டுமானங்களை அழித்து முந்தியநிலையிலும் கீழான அடிமைநிலைக்கு
இட்டுச்சென்ற கொடுமையை யாரிடம் முறையிடமுடியும்.
ஒரு சிறு இனத்தின் சுதந்திரதாகத்தை அடக்கி முற்றாக அழிக்க அகில உலகம்
ஒன்று சேர்ந்தவிந்தை ஈழப்போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்காலில் அரங்கேறி
யிருக்கிறது.உலகவரலாற்றில் ஒரு சிறு இனக்குளுமத்தை அழிக்க 20 நாடுகள்
(பகைமை நாடு அடங்கலாக) கூட்டுச்சேர்ந்த புதுமை 2009ம் ஆண்டில் ஈழத்தில்
நிகழ்ந்திருக்கிறது.
வாயளவில் தார்மீகம் பேசும் காந்திதேசம் தான் செய்த மாபெரும் துரோகத்தின்
பலன்களை வெகு விரைவில் அனுபவிக்கும் போது தான் ஈழ விடுதலைப்போராளி
களையும் அதன் கட்டமைபையும் அழித்த தவறை உணரும் ஆனால் அது காலங்கடந்த
ஞானோதயமாகும்.எந்த ஈழப்போராளிகளால் தன் இந்திய தேசியம் உடைந்துவிடும் எனத்தப்புக்கணக்குப்போட்டு அழித்தார்களோ அவர்கள் களத்தில் இல்லாததால்தான்
வேறொரு ஆதிக்க சக்தியால் இந்தியா பல துண்டுகளாக உடைவதைப்பார்த்து
செய்வதறியாது தானே தன் தலையில் மண் அள்ளிப்போட்டதை நினைந்து ரத்தக்
கண்ணீர் வடிப்பார்கள் இது சத்திய வாக்கு.
இலங்கையில் நடந்த போரில் தனிச்சிங்களப்படை நேரடியாகத்தமிழர் படையுடன்மோதி
வெற்றிவாகை சூடியிருந்தால் அதைச்சிறிலங்காப்படையின் வெற்றி என ஆரவாரப் பட்டிருக்கலாம்
ஒரு சிறிய இனக்குழுமத்தை அழித்தொழிக்க ஆதிக்க நாடுகள் எல்லம் ஒன்று சேர்ந்து
உலகத்திலுள்ள சகல போர் ஆயுதங்களைக்கொண்டு நீதி அற்ற படுபாதகமான இன
அழிப்புப்போரை நடத்தி முடித்து விட்டு தங்கள் கைகளில் உள்ள இரத்தக்கறையைக்
கழுவவும் முடியாமலும் மறைக்கவும் முடியாமலும் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்
ஈழப்போரில் வெற்றியடைந்தவர்கள் ஈழத்தமிழர் அன்றி வேறு யாரும் இலர்.
சொல்லொண்ணாத்துயர் அனுபவிக்கும் முள்வேலி மக்களின் ஒட்டு மொத்தத் துயரம்
ஊழித்தீயாய் ஒன்று திரண்டு அழிக்கப்புறப்படும் போது அதன் தாக்கத்தால் அழியப்போவது
சிங்களமும் சிங்களத்திற்கு முண்டு கொடுத்த 20 நாடுகளும் மட்டுமே.
கல்லறைகளில் துயில் கொள்ளும் பல ஆயிரம் இளந் தமிழர்களின் ஆத்மா அன்றுதான்
சாந்தி அடையும். அதேநேரம் ஈழவிடுதலை- துளிர் முளைக்கும் நாளும் அந்நாளே.
Friday, August 14, 2009
கல்லூரிக்காலம்- பாகம். 3
தை முதன்முதல் பாஸ்கரன்அறிந்து கொண்டான்.
பத்மினியின் கேழ்விக்குநவநீதன் சொன்னான் ஈஸ்வரன்
அன்று கல்லுரிக்கு வரவில்லை என்ற தகவலை.அதன்
மேல் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ரஸ்தாபந்தன்
என்ற நூலை க் கட்டி இன்று முதல் நீங்கள் எல்லாரும்
என் அண்ணாக்கள் என்று பத்மினி கூறினாள்.அவளின்
இக்கூற்றைக்கேட்ட பாஸ்கரனின் முகம் இருண்டு
போய்விட்டது.பத்மினி போகுமுன் பாஸ்கர்அண்ணா
இன்றுமாலை ஈஸ்வர் அண்ணாவையுங்கூட்டிக்கொண்டு
என் வீட்டுக்கு வாருங்கள் என்றுஅழைப்பைவிடுத்துவிட்டு
அவள் போய்விட்டாள். அவள் அவ்விடம் விட்டுப்போன்
பின்பு பாஸ்கரனின் மனதில் அன்று ஈஸ்வரன் சொன்ன
நல்ல புத்திமதிகள் ஒவ்வொன்றும் நிஞாபகத்திற்கு வந்தன.
ஈஸ்வரன்சரியாகத்தான் சொன்னான் நான்தான் முட்டாள்
தனமாகஏதேதோ கற்பனையில் மிதந்திருக்கிறேன்.நல்ல
காலம் பத்மினியிடம் ஏதும் தப்பாக உளறுமுன் விழித்துக்
கொண்டேன்என நினைத்துஆறுதல் அடைந்தான்.
பத்மினி கேட்டுக்கொண்ட மாதிரி பாஸ்கரனால் ஈஸ்வரனைக்
கூட்டிச்செல்லமுடியவில்லை. காரணம் நவநீதனின் உபதேசத்
தால் ஈஸ்வரனுடன்பேசுவதைகடந்த பத்து நாட்களுக்கு முன்
நிறுத்திவிட்டான். ஈஸ்வரன் மனதில் பாஸ்கரன் தன்னுடன்
பேசுவதைநிறுத்திக்கொண்டது கடும் வலியைதந்தபோதும் காலம்
மாறும் அவன் புத்தி சரிவந்ததும் தன்னுடன் பேசுவான் அதுவரை
பொறுமையைக் கடைப்பிடிப்போம் என நினைந்து அவனும்
பேசாமல் இருந்துவிட்டான்.
பரிட்சை முடிந்ததும் விடுமுறை அறிவிக்கு முன்பு வருகினற
வெள்ளிக்கிழமைமாலைஎல்லோருக்கும் ஒரு பிரியாவிடை
நிகழ்சியைப் பள்ளிக்கூடநிறுவாகம் ஒரு இசைக்கச்சேரியுடன்
ஒழுங்கு செய்துள்ள தகவல் அறிவிக்கப் பட்டது.அதே போல்
அந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த இசை நிகழ்சியில்
எல்லோரும் பங்குபற்றினார்கள்.இசைகச்சேரிஆரம்பித்த பின்
ஈஸ்வரன்தனிமையை நாடி ஒருவகுப்பறைக்குள் நுளைந்தான்.
அவன் உட்புகுந்த வகுப்பறை இரு பகுகளாகப்பிரிக்கப்பட்டு தனித்
தனியா இரு பகுதிகளாகஇயங்கியது.ஒரு தட்டிதான் தடுப்பாகக்
கட்டப்பட்டிருந்தது.
மற்றப்பகுதியில் ஈஸ்வரன் போல் தனிமையை நாடிவந்தபாஸ்கரன்
மேசையில் தலையைக்கவிழ்ந்துகொண்டுஆழ்ந்த யோசனையில்
மூழ்கியிருந்தான்.அடுத்தபகுதியில்நுளையும் போதே
பாஸ்கரன் இருந்தநிலையைஈஸ்வரன் கவனித்துக்கொண்டான்.
அவ்விடத்தில் வேறு யாரும் இல்லாததால்ஈஸ்வரன் பின்வரும்
பாடலை பாடத்தொடங்கினான்.
" நினைகூரும் நினைகூரும் நினைந்த்வுடன் வாரும் என்னிடம்
நினைகூரும் நினைகூரும்.
நண்பர் நம்மிடைக்கோபம் நாமறியாதுற்றபோதும் நாம் அதைப்
பாராது ஒன்று சேரவேண்டும் நினைகூரும் நினைகூரும்
பள்ளிக்கூடம் விட்டல் பின்பு பார்க்கென்று பட்டால் பல பல
நினைந்த அந்தப்பவளமான நேரத்தை நினைகூரும் நினைகூரும்
பத்மினி என்ற பேதை நம்மிடைப்பரவாமல்விட்டால் பாஸ்கரனே
நீயே என் பல மான நண்பன் நினைகூரும் நினைகூரும்."
கடைசி வரிகள் பாடிமுடியும் போது வில்லில் இருந்து புறப்
பட்ட அம்புபோல் தட்டியைவிலக்கிகொண்டுஓடிவந்து ஈஸ்வரனைக்
கட்டித்தழுவினான் பாஸ்கரன். இருவர்கண்களிலிருந்துகண்ணீர்
வழிந்தோடியது. மூடியதிரை அகன்றதுநண்பர்கள் இருவரும் ஓர்
உயிர் ஈர் உடலானார்.
நட்பு என்றும் தோற்றதாக சரித்திரம் இல்லை.
Tuesday, August 11, 2009
கல்லூரிக்காலம்- பாகம்.2
மாணவிஇவர்கள் வகுப்பில் சேர்ந்து
கொண்டார்.அவள் அழகில்மட்டுமல்ல
படிப்பிலும் ஒரு சூடிகையானமாணவி
யாகத்திகழ்ந்தாள். இவார்கள் வகுப்பு ஒரு
கையெழுத்துப்பிரதி இலக்கிய சஞ்சீகை
வெளியிடத்தீர்மானித்தது.வெளியிட உள்ள
சஞ்சீகைக்குஇணைஆசிரியர்களாக ஈஸ்வர
னும் அந்த புதிதாகவந்த மாணவி பத்மினி
யும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.இந்தக்கல்
லூரியிலும் ஈஸ்வரனின் பாட்டுத்திறன் பல
நண்பர்களையும் கலா ரசிகர்களையும்பெற்றுக்
கொடுத்திருந்தன.
சஞ்சீகை விடயமாக ஈஸ்வரனும்பத்மினியும்
பழகத்தொடங்கியதும் அவர்களிடையே
நல்ல நட்பு துளிர்விட ஆரம்பித் தது.
பாஸ்கரனும் ஈஸ்வரனும் எல்லப் பாடங்
களிலும் திறமையாகச் செய்வதால் பாடங்க
ளில் யாருக்கு சந்தேகம் வந்தாலும் இவர்க
ளிடம் உதவி கேட்டுப்பெறுவார்கள். பத்மினி
தன் சந்தேகங்களை ஈஸ்வரனிடம் அல்லது
பாஸ்கரனிடம் கேட்டுத்தெரிந்து கொள்வாள்.
இதனால் பத்மினிக்கும் பாஸ்கரனுக்கும் நல்ல
நட்பு இருந்து வந்தது. இந்நிலையில் பாஸ்கர
னுக்கு பத்மினிமேல் ஒருஈற்பு எற்படத்தொடங்
கியது.
இதைக் கவனித்த ஈஸ்வரன் பாஸ்கரனிடம்,
“நண்பா நாங்கள் ஏன் இந்தக்கல்லூரியில் சேர்ந்
தோம் என்பது நிஞாபகம் இருக்கிறதா எனவும்
க.பொ.த வில் சித்தி அடைந்தால்தான் எங்கள்
எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்ஆகையால்
வீண்கற்பனைகளுக்கு இடங்கொடாமல் படி”
எனஅறிவுரை கூறினான். ஈஸ்வரன் அவ்விடத்தை
விட்டு அகன்றதும் நவநீதன் பாஸ்கரனிடம் வந்து
பாஸ்கர் நான் ஒன்று சொல்லுவேன் நீ சண்டைக்கு
வந்துவிடாதே, நான் அவதானித்ததில் பத்மினி
உன்னில் ஈடுபாட்டுடன் இருப்பதுபோல் தெரிகிறது.
ஈஸ்வரன் பத்மினி தன்னுடன் மட்டும்தான் நட்பாய்
இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் அதனால்
தான் உன்னை அவளுடன் பழக வேண்டாம்என்
கிறான் எனப் பல சொல்லி பாஸ்கரன் மனத்தில்
ஒருசிறு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டான்.
இந்த பதின்ம வயதில் பெண்ணிடம் ஏற்படும்
ஈற்புச்சக்தி பலம் வாய்ந்தது.அதனால் பாஸ்கரன்
நவநீதனின் போதனையால் பத்மினியின் கவனத்
தைப் பெறும் முயற்சியில் ஈடுபடலானான்.இதனால்
நண்பர் இருவரிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள்
ஏற்படத்தொடங்கினது. பாஸ்கரனுக்கு ஈஸ்வரன்
மேல் கோபம் ஏற்படத் தொடங்கியது. இந்த மன
உளச்சலை நவநீதன் சரியாகப்பயன் படுத்திக்
கொண்டான்.பாஸ்கரனின் மனநிலையை எடை
போட்ட ஈஸ்வரன்சிறிது விலகி இருந்தால் எல்லாம்
சரியாகிவிடும்என எண்ணி பாஸ்கரனுடன் தனியே
இருக்கும் சந்தற்பத்தைக் குறைத்துக்கொண்டான்.
பத்மினி மனதில் எந்த சலனமும் இல்லததால்
அவள் எப்போதும் போல் இருவருடனும் பழகிக்
கொண்டாள்.அந்த வாரம் வந்த புதன்கிழமை
சிறிது தாமதமாகக் கல்லுரிவந்த பத்மினி பாஸ்கரன்
நவநீதன் முதலான நண்பர்களிடம் வந்து ஈஸ்வர்
அண்ணா எங்கே என்று கேட்டாள்.
(இதன் இறுதிப்பாகம் 14/08/2009 பிரசுரமாகும்)
Sunday, August 09, 2009
[கல்லூரிக்காலம்] பாகம்-1.
நண்பர்கள் ஒன்றாகவே நாலாம் வகுப்
பிலிருந்து க.பொ.த வகுப்புவரை சேர்ந்து
படித்து வந்தவர்கள். இருவருமே
படிப்பில் சூடிகையான மாணவர்கள். இருவர்
குடும்பமும் செல்வாக்கு பெற்ற வசதியான
குடும்பங்கள். ஈஸ்வரனின் அப்பா ஒரு வழக்
கறிஞர் பாஸ்கரனின் அப்பா ஒரு வியாபார
நிறுவனத்தின் அதிபர்.
ஈஸ்வரனும் பாஸ்கரும் நல்ல குணநலங்கள்
பெற்றசிறந்த மாணவர்கள். கல்லூரியிலும்
ஊரிலிலும் இவர்களின் இணை பிரியா நட்பு
வெகு பிரசித்தம்.கல்லூரியில் நடைபெறும்
விளையாட்டுப்போட்டி,கவிதைப்போட்டி,
கட்டுரைப்போட்டி என்று எல்லாப்போட்டி
களிலும் இந்த இரு நண்பர்களும் பங்குபற்று
வார்கள் பரிசும் பெறுவார்கள். இவர்களுக்கிடை
யேஆனபோட்டி ஆரோக்கியமான போட்டி
யாகவேஇருக்கும். ஒருவருக்குஒன்றென்றால்
மற்றவர் துடித்தெழுவார். ஈஸ்வரன் முறையாக்
சங்கிதம் கற்றவன் அத்துடன்நல்லகுரல் வழமும்
பெற்றவன். அதனால் அவனைப்பாடச்சொல்லி
அவன் பாடலை ரசிப்பதர்க்கென்று ஒரு கூட்டம்
அந்த கல்லூரியில் உண்டு.
கல்லூரி முடிந்தபின்பு கடக்கரையிலும் பூங்காவி
லும் நண்பர்கள் கூடுவார்கள் பல பல பேசி மகிழ்
வார்கள். மாலையானதும் வீடு திரும்பிவிடுவார்
கள்.காலம் உருண்டோடியது கல்லூரியின் கடைசி
வகுப்பான க.பொ.த வின் பரீட்சை எழுதும் நேரமும்
வந்த து பரீட்சைக்கு இரு நாட்களுக்கு முன் திடீரென
ஈஸ்வரன் சுகவீனமுற்றான் அவனால் பரிட்சை
எழுதமுடிய வில்லைஈஸ்வரன் வைத்தியசாலை
யில் அனுமதிக்கப்பட்டான்அவனை பார்க்கும்
பொறுப்பை தன் கையில் எடுத்துக்கொண்ட பாஸ்கரன்
பரீட்சயைத்தவற விட்டான். இருவரும்பரிட்சையைத்
தவறவிட்டதால் அடுத்தவருடமும் அதேவகுப்பில்
இருக்கவேண்டிய நிலை வந்த து. இளம் மாணவர்
களுடன் சேர்ந்து படிக்க விரும்பாத தால் இருவரும்
பட்டணத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரு
வரும்சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்கள். அங்கும்
இவர்களின்இணைபிரியா நட்பு பிரசித்தமானது.
இவர்களுடன் நவநீதன் என்றொரு மாணவன் படித்து
வந்தான். அவன் இவர்களுடன் நட்பாகப் பழக விரும்
பினான்.ஆனால் ஈஸ்வரனும் பாஸ்கரனும் நவநீத
னின் சில கூடாத நண்பர் களுடனுள்ள உறவால்
அவனை தங்கள் நட்புவட்டத்தில் சேர்த்டுக்கொள்ள
வில்லை. இது நவநீதன்மனதில் இவர்கள் மீது கடும்
சினத்தை எற்படுத்தியது.தருணம் பார்த்துஇவர்களைப்
பிரித்துவிடுகிறேன்என மனதினுள் கறுவிக்கொண்டான்.
(இதன் அடுத்த பாகம் 2009/08/12ல் வெளிவரும்)
Thursday, July 30, 2009
[தன்னம்பிக்கையை வளர்த்தல்]
அத்தனை புத்தகங்களை வாழ் நாள் முழுவதும் வாசித்
தாலும், தன்னம்பிக்கை தானாக வரும் என்பது
கேழ்விக்குறியே.
நீங்களாக முயற்சி எடுத்தாலே அன்றி தன்னம்பிக்கை
தானாக வரமாட்டாது. தன்னம்பிக்கையைக் கட்டி
எழுப்புவது அவ்வளவு சுலபமும் இல்லை.
தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பும் உங்கள் முயற்சி
யில் நீங்கள் பல தவறுகளை விடலாம். அப்படி தவ
றுகள் ஏற்படும் என்பதை நீங்கள் எதிர்பாற்தே இருக்
கவேண்டும்.
எப்படித் துவிச்சக்கர வண்டியை ஓட்டக் கற்கும் போது
பல தடவை கீழே விழுந்து, முழங்காலில் பல சிராய்ப்
புகள் ஏற்பட்ட போதும் மீண்டும், மிண்டும் எழுந்து
வண்டியின் இருக்கையில் ஏறி நீங்கள் ஓட்டக் கற்றுக்
கொண்டிர்கள் அல்லவா. ஒரு நாள் எது விததடுமாற்றமும்
இல்லமல் உங்களால் வண்டி ஓட்டமுடிந்ததுதானே.
தொலைக்காட்சி பாற்பதாலோ பல புத்தங்களை
வாசிப்பதாலோ தன்னம்பிக்கை தானாக வருவதில்லை.
எது தேவையோ அதை நோக்கிய பயணம் தடைபடா
து தொடரவேண்டும் அப்போது அது கைகூடும்.
தன்னம்பிக்கை என்பது பாட நெறியல்ல. அது ஒரு
உணற்சி, மனத்தின் தன்மைதான் அதை தீர்மானிக்
கிறது.ஆகையால் அது சம்பந்தமான உறுதியான
முயற்சி அவர்களிடம் இல்லையானால் யாராலும்
தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்ப முடியாது.
என்ன வழி முறையில் முயற்சி செய்தால் தன்னம்
பிக்கை உருவாகுமோ அந்த வழியை உணர்ந்து
அதன் வழி செல்லவேண்டும்.
பொன்னோ, பணமோ கொடுத்து தன்னம்பிக்கை
வாங்க முடியாது. அது கடையில் விற்கும் பொரு
ளும் இல்லை.மருந்துக் கடைகளிலும் கிடைக்கின்ற
பொருளும் அல்ல. அல்லது ஒரு வைத்தியர் ஒரு
குப்பியில் தன்னம்பிக்கை நிரப்பி நாள் ஒன்றுக்கு
மூன்று தரம் சாப்பிடுங்கள் என சீட்டை ஒட்டித்தரக்கூ
டிய பொருளும் அல்ல.
யார் தன்னம்பிக்கையை உங்களுக்குத் தரமுடியும்
என்றால் அவர் வேறு யாரும் இல்லை, நீங்கள்..நீங்கள்
மட்டுமே. உங்களால் மட்டுமே தன்னம்பிக்கையை
ஏற்படுத்த முடியும்.
வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனுபவங்கள் உங்கள்
தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பக் கைகொடுக்கும்
என்பதை மறந்து விடாதிர்கள்.
எதைச்செய்தால் தன்னம்பிக்கை எற்படும் என்று
கருதுகிறீர்களோ, அதை நோக்கி உங்கள்
முயற்சியை ஆரம்பித்தீர்களானால் கட்டாயம்
உங்களால் தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பி
தன்னம்பிக்கை நிறைந்தவராக மிளிரமுடியும்
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய தன்னம்பிக்கை
மிக மிக முக்கிமானது.
[This article give insight to the truth
to build your confidence.]
Tuesday, July 28, 2009
[மனித உரிமைகள்]
துள்ளான்.ஆனால்மற்ற உயிர் இன ங்களை
உணவுக்காகவோ அல்லது உல்லா
சத்திற்காகவோ அழிக்கும் கொடுமையை மனி
தன் தன் கையில்எடுத்துக்கொண்டான்.அதே
சமயம் மனிதன் மனிதனை அழிக்காமல்
ஒவ்வொரு நாடும் சட்டங்களின் துணையையே
நாடி வருகின்றன. அவர்கள் மனிதராக இருப்
பதால் அவர்களுக்கு அழிக்கமுடியாத சில உரிமை
கள்இருக்கின்றன. இந்த உரிமைகள் தான்
மற்றவர்களிடமிருந்துஉங்களைத்துன்புறுத்
துவதிலிரிந்தோ அல்லது கொலைசெய்வதில்
இருந்தோ பாதுகாக்கிறது. அந்த உரிமைகள் தான்
மற்றவர்களுடன்சேர்ந்து அமைதியாக வாழ்
வதற்கு வழி அமைக்கின்றன.பெரும்பாலனவர்
களுக்கு இந்த மனித உரிமைகளில் ஒரு சில
மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள். அவை
களில் தாங்கள்செய்யும் வேலைக்கு கூலி கொ
டுக்கப்படவேண்டும் என்பதும்தாங்கள் ஓட்டு
அழிக்க உரிமை உள்ளவர்கள் என்பது மட்டுமே
மேற் கொண்டு இருக்கும் உரிமைகள் என்ன
என்னஎன்பதைஅறியாதவர்களாகவே இருக்கி
றார்கள்உங்கள் உரிமை தெரியாத நிலையில்
இனப்பாகுபாடு, சகிப்புத்தன்மை, நீதி அற்ற
தன்மை, அடக்குமுறை மற்றும்அடிமைத்தனம்
முதலியவை தலைதூக்கின்றன.
இரண்டாம் உலகயுத்தம் நடைபெற்றபோது நடந்
த மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும்
மனிதப்பேரழிவுகளின்பின்னர் தோன்றிய ஜக்கிய
நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப் பட்டதே
இந்த மனித உரிமைப்பிரகடனமாகும்.
இப்பிரகடனம் மூலம் இந்த உலகத்தில் வாழும்
சகலரும்சுதந்திரமாகவும், நீதியாகவும்,அமைதி
யாகவும் வாழும்அடிப்படை உரிமையைக்கொண்
டுள்ளார்கள்என்பதைத்தெளிவு படுத்தியது.
மனிதப்பண்பு உலகமெல்லாம் போற்றப்பட
எங்கும் அமைதி தவழ, சுதந்திரமும் நீதியும் உல
கில்நிலைபெற்று ஓங்கிட மனித உரிமைகள் ஏற்
கப்பட்டுப் போற்றப்பட்டு சட்ட பூர்வமான வழி
களில் அவை காக்கப்படவேண்டும் என்பதுதான்
இந்தப்பிரகடனம்.
இதன் முதற்பிரிவு இப்படிக்கூறு
கிறது, “ மனிதர் யாவரும்சம்மே” எனும் சம்த்துவக்
கோட்பாடு மனிதர்களிடையே மதம், பிறப்பிடம்
போன்ற எந்த வகையான அடிப்படையிலும்பாகு
பாடுகள் இருக்க க்கூடாது
அனைவரும் சமம் யாவரும் சகோதரத்துடன்
இணைந்துவாழவேண்டும் என்பதாகும்
உலகில் ஒரே மாதிரியான சட்டம் இருக்க
வேண்டும் என ஜநா எதிர் பார்த்தாலும் ஒவ்
வொருநாடும்தங்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி
இந்தச் சட்டத்திற்குவிளக்கம் கொடுக்கிறார்கள்.
ஆசியாவின் மிகப் பெரியசனநாயக நாடு என்று
கூறப்படும் காந்தி தேசம் இதுநாழ்வரை இந்தப்
பிரகடணத்தை ஏற்று கையெழுத்திடவில்லை
என்பது மிக நகைப்புக்கிடமானது.
அதே போல்உலக வல்லரசு என்று சொல்லிக்
கொள்ளும் அமெரிகாவும் இப்பிரகடனத்தை
ஏற்றுக்கொள்ளவில்லை அடுத்தஉண்மையா
கும்.
பெரும் பான்மையான மேலைநாடுகள்
இந்த மனிதஉரிமைசம்பந்தமாக நேர்மையாக
நடப்பதில்லை. தங்கள் நலம்சார்ந்த விடை
யங்களில் மனித உரிமை பற்றி எதுவித கவலை
யையும் அற்றவர் களாகவே செயல் படுகிறார்கள்.
உலகில் பலநாடுகளில் இன்றுவரை மனித உரிமை
மீறல்கள்பற்றிய அதிகமான முறைப்பாடு காவல்
துறை, இராணுவம், சிருடைஅணிந்த துறைகளில்
பணிபுரியும் அலுவலர்கள் செய்த அத்துமீறல்கள்
பற்றியதாகத் தான் இருக்கின்றன. மனித உயிர்கள்
அவசியம் இன்றிக்கொல்லப்படுதல், தேவைஅற்ற
முறட்டுவழிகளில்மனிதர்களைத் துன்புறுத்து
வது, அவமானப்படுத்தப்படுவது ஆகியன சீருடை
அணிந்தவர்களால் அடிக்கடி அரங்கேற்றப்படுகின்
றனஎன்பது மிக்க் கசப்பான உண்மையாகும்.
அமைப்பு ரீதியாக திரள்வது, பேச்சுரிமை முதலியன
மறுக்கப்படுகின்றன.
சமிபத்தில் ஜநா செயலாளரின் சிறப்புப்பிரதிநிதி
வெளியிட்டஅறிக்கையில் நில உரிமைகள், இயற்
கை வழங்கள், சுற்றுச்சூழல் முதலான பிரச்சினை
களை கையில் எடுக்கும் மனிதஉரிமைப் போராளி
கள் இன்று அதிகம் ஆபத்தில் உள்ளனர்என்பதைச்
சுட்டிக் காட்டியுள்ளார். மனித உரிமைகளைப்
பறிக்கும் நிலையை நியாயப்படுத்தும் போக்கு இன்று
உலகெங்குமுள்ளது. செப்ரம்பர் 11 க்கு பின் இது மிக
மோசமாகியுள்ளது.
[This article explain the full components of
of Human Rights and its application.]
Monday, July 27, 2009
[கவிதை இலக்கணம்]
சீர் என்பன கவிதைக்குரிய இலட்சணமாகும். கவிதைகளில்
எதுகை முக்கியம். அதுதான் கவிதைக்கு இனிமைதருபவையா
கும். கவிதைஎழுதும் போது ஒவ்வொரு அடியின் ஆரம்பத்தில்
எதுகை இருந்தால்அது தனிச்சிறப்புப்பெறும். எதுகை என்பது பாட்
டின் வரிகளில்வரும் சொல்லின் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி
அமையும். உதாரணத்திற்குஒரு கண்ணன் பாட்டு ஒன்றை எடுத்
துள்ளேன்.
"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மாசெல்வக்களஞ்சியமே
என்னைக்கலிதிர்த்தே உலகில் ஏற்றம் புரியவந்தாய்."
முதல் வரியில், இரண்டாவது எழுத்து 'ன்' என்று வந்துள்ளது போல்
இரண்டாவதுவரியில் இரண்டாவது எழுத்து 'ன்' என்றுவந்துள்ளது.
இப்படி எதுகை அமையும் போதுஅந்தக் கவிதை சிறப்பு பெறும். முன்பு
வரும் சினிமா பாடல்கள் சாகா வரம் பெற்றவையாக, இன்றும் பலர்
விரும்பிக்கேட்பதற்குரிய காரணம் அந்தப்பாடலில் உள்ள கவிநயம்.
இசையுடன் சேர்ந்து கருத்து அழியாமல் மெல்லத் தவழ்ந்து வரும்
போது மனதிற்கு மகிழ்ச்சியையும் ஒரு மன அமைதியையும் கொடுக்
கின்றன. அப்படி அந்தபாடல்கள் அமைந்ததற்கு இந்த எதுகையும்
மோனையும் தான் வழி சமைத்தன என்றால்மிகை யாகாது.
இந்தக்காலக் கவிதைகள் வெறும் வசன நடையாகவே இருக்கிறது.
அதனால் தான் சமீபத்தில் வந்த எந்த ஒரு பாடலும், சாகா வரம்
பெறவில்லை. படம் திரையைவிட்டு அகன்றதும் அந்தப்படப்
பாடலும் காணாமல் போய்விடுகின்றன.
கண்ணதாசன், வாலி, மருதகாசி போன்ற கவிஞர்களின் படைப்புக்கள்
என்றும் அழியாமல் அலையில் தவழ்ந்து வருகின்றன.
இவர்கள் எவரும் சங்க காலப்பாடல் போல் கடும் இலக்கணத்துடன்
பாடல் இயற்றவில்லை. வெகு எழிய தமிழில் ஒத்த ஓசையுடைய
சொற்களைச்சேர்த்துக் கவிபுனைந்தவர்கள்.
சங்ககாலப் பாடல்கள் கடும் இலக்கணத்துடன் அமைந்தவை
சாதாரண மக்கள் பொருள் அறியும்வண்ணம் அப்பாடல்கள்
அமையவில்லை.சாதாரணமாக, யாவரும் பொருள்
அறிந்து கொள்ளக்கூடியதாக எந்த இலக்கணம் இல்லவிடினும்
எதுகைமோனை வரும்படியாகச் சொல்அமைத்து கவி
புனைந்தால்அந்தக்கவிதைகள் ஓசை நயம்மிக்க
கவிதைகளாக அமையும்.உதாரணத்திற்கு அடுத்த
ஒரு கண்ணன் பாடலை எடுத்துள்ளேன்
"அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்குப்பகலிடம் கோபமில்லை
ஏழையின் காதலில் பாபமில்லை"
இப்பாடலை இராகம்(Tune) இல்லமல்பாடினாலும் இனிமையாகவே
இருக்கிறது.கண்ணதாசன் சங்க காலத்தமிழில் பாடல்
புனையவில்லை சாதாரண தமிழில்தான் அவர் கவிதை
புனைந்தார். அவர் புனைந்த அத்தனை கவிதைகளிலும்,
எதுகை மோனை கண்டிப்பாக இருக்கும். கவிதைக்கு ஓசை நயம்
மிக மிகஅவசியம். கவிதைக்குதான் இராகம்
போடவேண்டுமே அல்லாமல் இராகத்திற்காகக் கவிதை
எழுத முயலக்குடாது என்பது என் அபிப்பிராயம்.
அமைந்து விட்ட எதுகை மோனையுடன் சந்தம் நிறைந்த
பாடலுக்கு இராகம்போடும்போது பாடலுடன் இணைந்து
இராகம் வரும்போது அந்தப்பாடல் எல்லோர் மனதையும்
கவர்ந்த பாடலாக அமைந்து விடுகிறது. அத்துடன் சாகா
வரத்தையும் பெற்றுவிடுகிறது. இராகத்திற்காகப்
பாட்டுஎழுதும் போது கவிதைக் கிருக்கிற எந்த
இலக்கணமும் இல்லததால் இராகம் இல்லாமல்
பாடலைப்பாடினால் அது வசன நடையாகவேவரும் என்பது
முற்றிலும் உண்மை. இது எப்படி இருக்கிறதென்றால்
குதிரைவண்டிக்கு முன்னால் பூட்டவேண்டிய குதிரையை
வண்டியின் பின்னால் பூட்டியமாதிரி இருக்கிறது
ஆகையால் கவிதை இலக்கணம் என்று நான் சங்க கால
இலக்கணத்தைக்குறிப்பிடவில்லை.கண்ணதாசன் கால
கவிதை இலக்கணத்தைக் கைக்கொணடு எதுகை மோனை
வரும் வண்ணம் கவிதை புனைவதையே இங்கு நான்
குறிப்பிட்டுள்ளேன்.
கடைசியாக கவிதை, கவிதைக்குரிய இலக்கணங்களுடன்
வெளிவரவேண்டும். அப்போது தான் தமிழ் தமிழாக இருக்கும்
என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
[ This article explain the minimum rules to be
followed when composing a poem.]
Sunday, July 26, 2009
[வெற்றிநோக்கியபயணம்]
கொள்ளவேண்டிய நாலு முக்கியமான
வழிமுறைகளாவன முறையே
1. தன்மை மாறுதல் எப்படி என அறிதல்
2. காலவிரையம் பற்றியஅறிவை
மேம்படுத்துதல்
3. ஈடு பாட்டின் அழவுகோலை உறுதிப்
படுத்தல்
4. முயற்சியின் தரத்தை உயர்த்துதல்
என்பனவாகும்.
(அடுத்த பதிவில் தன்மை மாற்றல்
பற்றிய வழிமுறைகளை ஆராய்
வோம்)